சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!
சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !! திரு அனிமல் கேர், 🍁 நாட்டு மாடு வளர்க்கும் நண்பர்கள் பாலை மட்டுமே நம்பி மாடு வளர்ப்பது இல்லை. 🍁 அதை விட விலை மதிப்பில்லா பொருட்களை கால்நடைகள் தருகின்றன. அது தான் சாணம் மற்றும் கோமியம். அவற்றை எப்படி சேமிப்பது என்று பார்ப்போம். நாம் செய்ய வேண்டியவை : 🍁 பால் பண்ணை அமைக்கும் போது சற்றே சரிவுடன் கூடிய ஒரு நல்ல தரை தளம் கால்நடைகளுக்கு அமைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சற்று சொரசொரப்பாக இருக்குமாறு அமைக்க வேண்டும். 🍁 பின்னர் சாணமும், கோமியமும் ஒரு வடிகாலின் மூலம் தேங்கும் அமைப்பு இருக்க வேண்டும். 🍁 நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிகள் கோமியத்தை கம்பி வலை அமைத்து பிரித்து எடுத்து பஞ்சகாவ்யா மற்றும் இயற்கை பு+ச்சிகொல்லி மருந்து செய்து பயன்படுத்தலாம். 🍁 அதே போல் சாணத்தை கோபர் வாயுவாக தயாரிக்க பயன்படுத்தலாம். ஒரு மாட்டின் ஒரு மாத சாணம் இரு சிலிண்டர் அளவு வாயுவை தரும். அதிலிருந்து நம்மால் மின்சாரம் தயாரிக்கவும் முடியும். 🍁 சாணத்தை வைத்து நாம் கோபர் வாயு தயாரித்த பின், மிச்சம் உள்ள சாணத்தை மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தலாம். இதனால் நமக்கு இயற்கை...