நாட்டுக்கோழிகளுக்கு மழைக்காலத்தில் வரும் நோய்கள்...!

நாட்டுக்கோழிகளுக்கு மழைக்காலத்தில் வரும் நோய்கள்...!

Mr Animal Care,



1. வெள்ளைகழிச்சல்

2. சளி மற்றும் சுவாசக்கோளாறு

3. வாதநோய்

4. கோழி காய்ச்சல்

5. தோல் முட்டை இடுதல்


★ இது போன்ற நோய்கள் மழைக்காலத்தில் கோழிகளை பாதிக்கும்.

★ நோய்கள் வந்தபின் மருத்துவம் செய்வதைவிட நோய் வருமுன் பாதுகாப்பதே சிறப்பு. கோழிகளுக்கு நோய்கள் வர முக்கிய காரணம் குடற்புழுக்களே.


★  தாய் கோழிகளுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

★  வளரும் இளம் கோழிகளுக்கு (1 மாதம் முதல் 5 மாதம் வரை உள்ள கோழிகள்) மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் மருந்து கொடுக்க வேண்டும்.

★ இயற்கை முறையில் கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய தேவையான பொருட்கள் :


1. ஆகாச கருடன் கிழங்கு - 0.5 கிலோ 

2. சோற்றுக்கற்றாழை - 0.5 கிலோ 

3. குப்பைமேனி இலை - 0.5 கிலோ

4. பு+ண்டு - 0.25 கிலோ 

5. கருஞ்சீரகம் - 25 கிராம்

6. மஞ்சள்தூள் - 100 கிராம்

7. வேப்ப இலை - 0.5 கிலோ

8. சீரகம் - 50 கிராம்

9. சின்ன வெங்காயம் - 0.25 கிலோ

10. மிளகு - 25 கிராம்


செய்முறை : 

★ சீரகம், மிளகு, கருஞ்சீரகம் ஆகிய மூன்று பொருட்களையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். 

★ மஞ்சள் தூளை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

★  அரைத்த கலவை உடன் மஞ்சள்தூள் மற்றும் பொடி செய்த கலவையை ஒன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக கோழிகளுக்கு காலை தீவனத்திற்கு முன்பே கொடுக்க வேண்டும் (அல்லது) காலை தீவனத்தில் கலந்து கொடுக்கலாம்.

★ இந்த மருந்தை கோழிகளுக்கு கொடுக்கும் போது குடற்புழுக்கள் வெளியே வந்து விடும். இந்த மருந்தை 200 பெரிய கோழிகளுக்கும், 400 இளம் கோழிகளுக்கும் கொடுக்கலாம். இந்த மருந்தை தயாரித்த 5 மணி நேரத்திற்குள் பயன்படுத்திட வேண்டும்.









Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!