Posts

Showing posts from May, 2022

பார்த்தீனியம் நச்சு செடி...!

பார்த்தீனியம் நச்சு செடி...! 🍃 இந்த நச்சு செடி எல்லா விதமான சு+ழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன் உடையது. தற்போது இந்த செடி இந்தியா முழுவதும் பரவி உள்ளது. இது விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பது மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் நச்சு ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்த நச்சு செடியை ஒழிக்கும் முறையை பற்றி இன்றைக்கு பார்ப்போம். தன்மை : 🍃 இந்த நச்சு செடி முதலில் தரிசு நிலங்களில் பரவி இருந்தது. தற்போது விளை நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளது.  🍃 இந்த நச்சு செடி ஆண்டிற்கு 3 முறை வளரும் தன்மை உடையவை. சுமார் 10,000 விதைகள் ஒரு செடியில் இருந்து உற்பத்தி ஆகின்றது. இந்த விதைகள் அனைத்தும் 100 சதவீதம் முளைப்புத்திறன் கொண்டவை. விதைகள் மண்ணில் நீண்ட காலம் வரை பாதிப்படையாமல் இருக்கும். கால்நடைகள் : 🍃 கால்நடைகள் பார்த்தீனிய செடிகளை உண்ணுவதில்லை என்றாலும், அதன் நச்சுத்தன்மை கால்நடைகள் பார்த்தீனியம் செடிகளின் வழியாக நடக்கும் போது அல்லது அதனை நுகரும் போதும் பரவுகிறது. அதன் பின் கால்நடைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.  🍃 எருமைகளுக்கும் அதன் கன்றுகளுக்கும் உணவாகக் கொடுக்கும் பொழுது குறைவான மற்றும...

கால்நடைகளுக்கான தீவன செலவை குறைக்கும் முறை | How to reduce the cost of fodder for livestock in tamil .

கால்நடைகளுக்கான தீவன செலவை குறைக்கும் முறை !! How  to reduce  the  cost  of fodder for livestock  in tamil !! ★  கால்நடை வளர்ப்பு விவசாயத்துடன் இணைந்த உப தொழிலாக உள்ளது. எனவே, விவசாயிகள் தற்போது பசுக்களை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  ★ அவர்கள் பசுந்தீவனத்துக்கு அதிக அளவில் செலவிடும் நிலையில், தீவனச் செலவுகளை பல முறைகளில் குறைக்க வாய்ப்புண்டு. அதே போல் கால்நடைகள் வேளாண்மை உற்பத்திக்கு பல வகைகளில் உதவியும் புரிகிறது. விவசாயிகளின் நிரந்தர வருமானத்துக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யவும் ஆதாரமாக உள்ளது. ★ மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தின் அளவில் சுமார் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே கிடைக்கிறது. இந்த முறைகளைப் பயன்படுத்தினால், தீவனச் செலவு பெருமளவு குறையும். அதை பற்றி இங்கு காண்போம்.  கால்நடைகளை பேணி காக்கும் முறை : ★ விவசாயிகள் பேணி காக்கும் கலப்பின கால்நடைகளுக்கு சமச்சீரான சத்துள்ள தீவனத்தை ஆண்டு முழுவதும் கொடுக்க வேண்டியுள்ளது. கால்நடைகளின் பராமரிப்பில் 60-70 சதவீதம் தீவனச் செலவாக உள்ளது. இதை குறைப்பதற்கு உ...

கறவைப் பசுக்களுக்கு கீட்டோசிஸ் நோய் ஏற்படும் விதம்!! How ketosis occurs in dairy cows in tamil!!

Image
கறவைப் பசுக்களுக்கு கீட்டோசிஸ் நோய் ஏற்படும் விதம்!! How ketosis occurs in dairy cows in tamil!! Mr Animal Care, ◆ கீட்டோசிஸ் என்பது மாவுச்சத்து (சர்க்கரை சத்து) பற்றாக்குறை நோய். ◆ கன்றை ஈன்றதும் பசு நிறைய பால் கொடுக்கிறது. பாலில் சர்க்கரை வெளியாகிறது. ◆ இரத்தத்தில் போதுமான சர்க்கரை இல்லாது போனால் உடம்பிலுள்ள கொழுப்பு ஜீரணிக்கப்படுகிறது. ◆ கொழுப்பு ஜீரணம் ஆகும் பொழுது அசட்டோன் என்னும் கழிவுப் பொருள் இரத்தத்தில் கலக்கிறது. ◆ இந்த அசட்டோனை கல்லீரல் உடம்பை விட்டு வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும் பொழுது கீட்டோசிஸ் நோய் ஏற்படுகிறது. ◆ கன்று ஈன்ற 20-30 நாட்களில் இந்நோய் ஏற்படும். ◆ சர்க்கரை நோயாளிக்கு வருகின்ற கீட்டோசிஸ் நோய் போன்றது தான் இந்த கீட்டோசிஸ். ◆ பாதிக்கப்பட்ட பசுவிற்கு அடர் தீவனத்தில் (கலப்பு தீவனம்) நாட்டமிருக்காது. பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் சாப்பிடும். பாதிப்பு அதிகமாகும் பொழுது, அமிலத்தன்மை அதிகமாகிறது. ◆ பால் குறையும். பசி குறையும். வெறும் வாயை அசைத்து பொய் அசைபோடும். ◆ பொய் அசைபோடும் பொழுது நுரையுடன் உமிழ் நீர் வெளியாகும். ◆ தொடர்ந்து உடம்பை நக்கிக் கொண்டிருக்கும். இரை...