கறவைப் பசுக்களுக்கு கீட்டோசிஸ் நோய் ஏற்படும் விதம்!! How ketosis occurs in dairy cows in tamil!!

கறவைப் பசுக்களுக்கு கீட்டோசிஸ் நோய் ஏற்படும் விதம்!!

How ketosis occurs in dairy cows in tamil!!

Mr Animal Care,



◆ கீட்டோசிஸ் என்பது மாவுச்சத்து (சர்க்கரை சத்து) பற்றாக்குறை நோய்.

◆ கன்றை ஈன்றதும் பசு நிறைய பால் கொடுக்கிறது. பாலில் சர்க்கரை வெளியாகிறது.

◆ இரத்தத்தில் போதுமான சர்க்கரை இல்லாது போனால் உடம்பிலுள்ள கொழுப்பு ஜீரணிக்கப்படுகிறது.

◆ கொழுப்பு ஜீரணம் ஆகும் பொழுது அசட்டோன் என்னும் கழிவுப் பொருள் இரத்தத்தில் கலக்கிறது.

◆ இந்த அசட்டோனை கல்லீரல் உடம்பை விட்டு வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும் பொழுது கீட்டோசிஸ் நோய் ஏற்படுகிறது.

◆ கன்று ஈன்ற 20-30 நாட்களில் இந்நோய் ஏற்படும்.

◆ சர்க்கரை நோயாளிக்கு வருகின்ற கீட்டோசிஸ் நோய் போன்றது தான் இந்த கீட்டோசிஸ்.

◆ பாதிக்கப்பட்ட பசுவிற்கு அடர் தீவனத்தில் (கலப்பு தீவனம்) நாட்டமிருக்காது. பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் சாப்பிடும். பாதிப்பு அதிகமாகும் பொழுது, அமிலத்தன்மை அதிகமாகிறது.

◆ பால் குறையும். பசி குறையும். வெறும் வாயை அசைத்து பொய் அசைபோடும்.

◆ பொய் அசைபோடும் பொழுது நுரையுடன் உமிழ் நீர் வெளியாகும்.

◆ தொடர்ந்து உடம்பை நக்கிக் கொண்டிருக்கும். இரைப்பையின் செயல்பாடுகள் குறையும்.

◆ வாயிலிருந்தும், உடம்பிலிருந்தும் அசட்டோன் வாடை (பழ வாசனை) வரும். சாணத்தில் சளி படர்ந்திருக்கும்.

◆ சில சமயங்களில் அசட்டோன் மூளையை பாதித்து தடுமாற்றதை ஏற்படுத்துகிறது.

◆ கழுத்தை வளைத்து முறுக்கும். பக்கவாட்டிலும், மேலேயும் கழுத்தை நெரிக்கும். சில சமயம் வலிப்பு ஏற்படும்.

◆ கட்டுக் கயிற்றை அறுத்துக் கொண்டு திமிரும். உடம்பைக் காயப்படுத்திக் கொள்ளும். மருத்துவரை அழைத்து உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.

◆ அதோடு உடைத்த மக்காச்சோளத்துடன் வெல்லம் கலந்து கொடுக்கலாம்.

◆ மாவுச்சத்துக் குறைவால் ஏற்படும் கீட்டோசிஸ் நோயை தடுக்க சினைப்பசுவுக்கு தினமும் ஒரு கிலோ உடைத்த மக்காச்சோளம் கொடுக்க வேண்டும்.

◆ கன்று ஈன்ற பிறகு இரண்டு கிலோ மக்காச்சோளம் கொடுக்க வேண்டும். போதுமான அளவு மாவுச்சத்து கொடுத்தால் கீட்டோசிஸ் நோய் வராது.


மாவுச்சத்து பற்றாக்குறையை தீர்க்கும் அசோலா

◆ மக்காச்சோளத்திற்கு அடுத்தபடியாக அசோலாவில் 25-30 விழுக்காடு புரதச்சத்து, 14-15 விழுக்காடு நார்ச்சத்து, சுமார் 3 விழுக்காடு கொழுப்புச்சத்து, 45-50 விழுக்காடு மாவுச்சத்து உள்ளது.

◆ அசோலா என்பது பாசி வகையைச் சார்ந்த உயிரினமாகும். அசோலாவை கறவை மாடுகளுக்கு மட்டுமின்றி, மற்ற கால்நடைகளுக்கும் அளிக்கலாம்.

◆ 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்தும், கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துகள் உள்ளன.

◆ வைட்டமின் ஏ சத்து உள்ளதால் அசோலா சாப்பிட்டால் கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

◆ அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பதால் 5 லிட்டர் பால் கறக்கும் மாடு 6 லிட்டர் வரை பால் உற்பத்தியை அதிகரிக்கிறது.

◆ பாலின் கொழுப்புச்சத்து 10 சதவீதம் வரையும், கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் 3 சதவீதமும் உயருகிறது.

◆ ஒரு கிலோ அசோலாவை தீவனமாக கறவை மாடுகளுக்கு கொடுத்தால், ஒரு கிலோ பிண்ணாக்கு கொடுப்பதற்குச் சமம்.

Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!