பார்த்தீனியம் நச்சு செடி...!
பார்த்தீனியம் நச்சு செடி...!
🍃 இந்த நச்சு செடி எல்லா விதமான சு+ழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன் உடையது. தற்போது இந்த செடி இந்தியா முழுவதும் பரவி உள்ளது. இது விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பது மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் நச்சு ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்த நச்சு செடியை ஒழிக்கும் முறையை பற்றி இன்றைக்கு பார்ப்போம்.
தன்மை :
🍃 இந்த நச்சு செடி முதலில் தரிசு நிலங்களில் பரவி இருந்தது. தற்போது விளை நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளது.
🍃 இந்த நச்சு செடி ஆண்டிற்கு 3 முறை வளரும் தன்மை உடையவை. சுமார் 10,000 விதைகள் ஒரு செடியில் இருந்து உற்பத்தி ஆகின்றது. இந்த விதைகள் அனைத்தும் 100 சதவீதம் முளைப்புத்திறன் கொண்டவை. விதைகள் மண்ணில் நீண்ட காலம் வரை பாதிப்படையாமல் இருக்கும்.
கால்நடைகள் :
🍃 கால்நடைகள் பார்த்தீனிய செடிகளை உண்ணுவதில்லை என்றாலும், அதன் நச்சுத்தன்மை கால்நடைகள் பார்த்தீனியம் செடிகளின் வழியாக நடக்கும் போது அல்லது அதனை நுகரும் போதும் பரவுகிறது. அதன் பின் கால்நடைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.
🍃 எருமைகளுக்கும் அதன் கன்றுகளுக்கும் உணவாகக் கொடுக்கும் பொழுது குறைவான மற்றும் கடுமையான நச்சுத்தன்மை உடலில் ஏற்பட்டு, வாய்ப்பகுதிகள் மற்றும் குடல்பகுதிகளில் புண்கள் ஏற்படுகின்றது.
🍃 சிறுநீரகம் மற்றும் ஈரல் பகுதிகளில் ஏற்படும் நச்சுத்தன்மையால் கால்நடைகளில் மலட்டு தன்மை ஏற்படுகிறது. பார்த்தீனியம் பரவியுள்ள பகுதிகளில் மேயும் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால் மனிதர்களுக்கு தீமை விளைவிக்கக் கூடியது.
கட்டுப்பாடு :
🍃 மூன்று கிலோ சுண்ணாம்பு, 10 லிட்டர் தண்ணீர், நான்கு கிலோ உப்பு, மூன்று லிட்டர் கோமியம், இரண்டு லிட்டர் வேப்ப எண்ணெய் கொண்ட கரைசலை தயாரித்து, களைகள் மீது தௌpத்தால் பார்த்தீனியம் கட்டுக்குள் வரும்.
◆ பூ பூப்பதற்கு முன் கையுறை அணிந்து செடிகளை வேருடன் பிடிங்கி எரித்து விட வேண்டும். இதனால் விதை பரவுவது தடுக்கப்படும். மூடாக்கு அமைத்தும் கட்டுப்படுத்தலாம்.
Comments
Post a Comment