மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!

Cow Stomach Flatulence - Symptoms and Prevention.!

Mr Animal Care,


மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!

நோய்க்கான காரணங்கள் : 

★ மாடுகளின் வயிற்றில் நொதித்தல் மூலம் உண்டாகும் அதிகப்படியான வாயுவினால் இந்நோய் ஏற்படுகிறது.


★ மாடுகளின் வயிற்றில் தீவனம் நொதிக்கும் போது உண்டாகும் வாயு மூலக்கூறுகள் ஒன்றாக இணைந்து வயிற்றிலிருந்து காற்று வெளியேறுவது தடுக்கப்பட்டு வயிறு உப்பி விடும்.


★ நிலையான நுரை வயிற்றில் உண்டாவதால் இந்நோய் ஏற்படுகிறது. 


★ மாடுகளின் அசையு+ண் வயிற்றில் நுரைப்புத் தன்மை ஏற்படுவதால் வயிறு உப்புசம் ஏற்பட்டு மாடுகள் சிரமத்திற்கு உள்ளாகின்றன.


★ புரதச்சத்து கொண்ட பயிறு வகைத் தீவனங்களான ஆல்பால்பா போன்றவற்றின் இளம் இலைகளை மாடுகள் உண்ணும் போது அவற்றில் இருக்கும் அதிகப்படியான கரையும் புரதச்சத்து மற்றும் இளம் தானியப் பயிர்களை மேய்வது போன்றவை வயிறு உப்புதல் ஏற்படக் காரணமாக அமைகின்றன.


★ அதிக தரம் வாய்ந்த வைக்கோலைத் தீவனமாக அளிப்பதாலும் ஏற்படுகிறது. 


★ அதிக தானியங்கள் நிறைந்த தீவனத்தினை மாடுகளுக்கு கொடுப்பதாலும் வயிறு உப்புசம் நோய்க்கு உள்ளாகின்றது.


★ நன்றாக மாவு போன்று அரைக்கப்பட்ட தீவனத்தினை மாடுகளுக்கு அளிப்பதாலும் உருவாகிறது.


★ உணவுக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக வயிற்றிலிருந்து காற்று வெளியேறுவது தடுக்கப்படுவதாலும் இந்நோய் ஏற்படுகிறது.


அறிகுறிகள் :


★ அசையூண் வயிறு உப்பிக் காணப்படுதல் அல்லது வயிற்றுப்பகுதி முழுவதும் உப்பிக் காணப்படுதல்


★  மாடு நடக்க சிரமப்படுதல், அடிக்கடி படுத்து எழுந்திரித்தல்


★ தரையில் உருளுதல்


★ வயிற்றை நோக்கி அடிக்கடி உதைத்துக் கொண்டிருத்தல்


★ வயிறு உப்புதலின் காரணமாக ஏற்படும் திடீர் இறப்பு, மூச்சு விட சிரமப்படுதல், வலியின் காரணமாக பற்களைக் கடித்தல், வாய் மூலம் மூச்சு விடுதல், நாக்கு வெளியே துருத்திக் கொண்டு தலையினை நீட்டிக் கொண்டு இருத்தல்.


★ மாடுகளுக்கு வயிறு உப்புசம் கண்டவுடன் செய்ய வேண்டிய முதலுதவிகள் 

★  ஒரு குச்சியை மாட்டின் வாயில் எப்பொழுதும் இருக்குமாறு வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மாட்டிற்கு அதிகப்படியான உமிழ் நீர் சுரக்கும் இந்த உமிழ் நீர் வயிற்று பகுதியினை சென்றடையும் போது வயிற்றில் உண்டாகும் வாயு உற்பத்தி குறைக்கப்படும்.

★  நொதிப்பு தன்மையை தடைசெய்யும் தன்மை தாவர எண்ணெய்களுக்கு உண்டு. அந்த வகையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் (நல்ல எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்) ஏதாவது ஒன்றை 100 முதல் 250 மில்லி மாட்டின் வாய் வழியாக உள்ளுக்கு புரையேறா வண்ணம் கவனமாக ஊற்ற வேண்டும்.


★  தண்ணீர் குடிக்க விடக் கூடாது. முடிந்தவரை மாட்டினை நடக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும்.


★ அதோடு கூட கால்நடை மருத்துவரை அணுகி வயிற்றை பரிசோதித்தும் முறையான சிகிச்சையும் அளிக்கலாம். 


வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் ..!


★  நோய்க்கான தடுப்பு முறைகளைப் பற்றி பார்ப்போம்.


நோய் தடுப்பு முறைகள் :


★  மாடுகளுக்கு புரதச்சத்து மிகுந்த பயறு வகை பசுந்தீவனங்களை அளிக்கக்கூடாது.


★ மாடுகளை மேய்ச்சல் நிலத்தில் விடுவதற்கு முன்பு அவைகளுக்கு வைக்கோலைத் தீவனமாக அளித்தல் வேண்டும்.


★  மாடுகளின் மேய்ச்சல் நிலத்தில் புல்வகைகளை அதிகமாக வளர்த்து நுரைப்புத் தன்மையினை ஏற்படுத்தும் தீவனங்கள் எடுக்கும் அளவினைக் குறைத்தல் வேண்டும். 


★ இளம் பசுந்தீவனங்களுக்குப் பதிலாக நன்கு வளர்ந்த தீவனங்களை மாடுகளுக்கு அளித்தல் வேண்டும்.


★ பசுந்தீவனங்களை மாடுகளுக்கு அளிக்கும்போது அவற்றில் 50 சதவீதம் மட்டுமே பயறுவகைத் தீவனம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுவது வயிறு உப்புசம் ஏற்படுவதைத் தவிர்க்கும்


★ வயிற்றில் நுரை ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்களை 60 - 120 மில்லி தினமும் இரண்டு வேளை (பால் கறக்கும் போது) அளித்தல் வேண்டும்.


★ மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில், குறைந்தபட்சம் 10 - 15 சதவீதம் நறுக்கப்பட்ட உலர் தீவனங்களை அடர் தீவனத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். 


★ உலர்தீவனங்கள் பொதுவாக தானிய வகைகளின் தட்டுகள், காய்ந்த புற்கள் போன்றவையாக இருப்பது நல்லது.


★ மாடுகளுக்கு தானியங்களைத் தீவனமாக அளிக்கும்போது அவற்றை ஒன்றிரண்டாக அரைத்து கொடுக்க வேண்டும். நன்றாக மாவு போன்று அரைத்து கொடுக்கக்கூடாது.


★ மாடுகளுக்கு குச்சித் தீவனங்களைத் தயாரிக்கும் போது அதில் நன்கு மாவு போன்று அரைத்த தானியங்களைச் சேர்க்கக்கூடாது.


இயற்கை முறை வைத்தியம் :


ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள் :


★ வெற்றிலை - 10 எண்ணிக்கை, பிரண்டை - 10 கொழுந்து, வெங்காயம் - 15, இஞ்சி - 100 கிராம், பு+ண்டு - 15 பல், மிளகு - 10 எண்ணிக்கை, சின்ன சீரகம் - 25 கிராம், மஞ்சள் - 10 கிராம் இவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.


சிகிச்சை முறை : (வாய் வழியாக)


★ சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மேலே உள்ள மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கொள்ள வேண்டும்.


★ அதற்கு பிறகு அந்த உருண்டைகளுடன் கல் உப்பு (தேவைப்படும் உப்பு - 100 கிராம்) தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும். 


★ இவ்வாறு மாடுகளுக்கு வயிறு உப்புசம் தென்பட்ட உடன் கொடுத்து வந்தால் நாளடைவில் சரி செய்து விடலாம்.














Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!