கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!
கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை !!
Herbal treatment for dairy cows in tamil.
Mr Animal Care,
மடிவீக்க நோய் (Flatulence) :
★ கறவை
மாடுகளுக்கு பலவகையான நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதாவது மடிவீக்க நோய், வயிறு உப்புசம், கழிச்சல், கோமாரி வாய்ப்புண், விஷக்கடி போன்றவை ஏற்படலாம். அதற்கான இயற்கை முறை சிகிச்சைகள் பற்றி இங்கு காண்போம்.
மடிவீக்க நோய் (Flatulence) :
★ மடிவீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி மூலமாகவே ஏற்படுகிறது. இந்த நேரத்தில் மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடையதாகவும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும்.
சிகிச்சை முறை :
★ மடிவீக்க நோய்க்கு சோற்றுக்கற்றாழை-200 கிராம், மஞ்சள் பொடி-50 கிராம், சுண்ணாம்பு-5 கிராம் போன்றவை தேவைப்படும்.
★ மேற்குறிப்பிட்ட மூன்றையும் நன்றாக கெட்டியாக அரைத்து, பின் ஒரு கை அளவு எடுத்து, அதை நீர் விட்டு கரைத்து, நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவிவிட வேண்டும். இவ்வாறு பூசிவர மடிவீக்கம் விரைவில் குணமடையும்.
வயிறு உப்புசம் :
★ கால்நடைகளில் வயிறு உப்புசம் என்பது தீவன மாறுபாடுகளினால் ஏற்படக்கூடியது. இது மிக எளிதில் செரிக்கக்கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது.
சிகிச்சை முறை :
★ வயிறு உப்புசத்தை போக்க வெற்றிலை - 10 எண்ணிக்கை, பிரண்டை - 10 கொழுந்து, சிறிய வெங்காயம் - 15, இஞ்சி - 100 கிராம், பு+ண்டு - 15 பல், மிளகு - 10 எண்ணிக்கை, சின்ன சீரகம் - 25 கிராம், மஞ்சள் - 10 கிராம் ஆகியவை தேவைப்படும்.
★ சின்ன சீரகம் மற்றும் மிளகை இடித்து, அதன் பிறகு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் கலக்க வேண்டும்.
★ பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு 100 கிராம் சேர்த்து, தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.
கழிச்சல் :
★ நீர்த்த துர்நாற்றமுடைய கழிச்சல் மாடுகளுக்கு ஏற்படும். உடலிலுள்ள நீர்ச்சத்து, தாது உப்புகள் அதிகமாக வெளியேறி மாடுகள் சோர்ந்து காணப்படும்.
சிகிச்சை முறை :
★ சின்ன சீரகம் 10 கிராம், கசகசா 10 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 எண்ணிக்கை, மஞ்சள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் போன்றவற்றை நன்கு கருகும் வரை வறுத்து, நீர்தௌpத்து இடித்துக்கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் 2 பல், பூண்டு 2 பல், கறிவேப்பிலை 10 இலை, பனைவெல்லம் 100 கிராம் ஆகியவற்றை தனியாக நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
★ இந்த இரு கலவைகளையும் கலந்து சிறுசிறு உருண்டைகளாக்கி 100 கிராம் கல் உப்பில் தோய்ந்தெடுத்து மாட்டின் நாவின் சொரசொரப்பான மேல்பகுதியில் தேய்த்தவாறு ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.
Comments
Post a Comment