Posts

Showing posts from March, 2022

கர்ன்சி மாடு பற்றிய தகவல்கள் | Information about the cow in tamil,

கர்ன்சி மாடு பற்றிய தகவல்கள்..!  Information about the cow  in tamil, மாடு இனங்கள் (Cow breeds) :  ◆  தற்போது கால்நடை வளர்ப்பு என்பது அனைவரும் செய்துவரும் தொழில் எனலாம். அந்த கால்நடைகளில் நாட்டு மாடு, கலப்பின மாடு மற்றும் அயல் நாட்டு மாடு என பல வகைகள் உள்ளன. அந்த வகையில் அயல் மாட்டினமான கர்ன்சி மாடு பற்றி இன்றைய பதிவில் காணலாம். ◆  கர்ன்சி மாடு இனங்கள் பிரான்சின் கர்ன்சி எனும் தீவிலிருந்து தோன்றியவை ஆகும். எனவே தான் அந்த மாடுகள் கர்ன்சி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. ◆ இந்த மாட்டின் பாலில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. அதாவது அவற்றின் பாலில் பீட்டா கரோட்டின் சத்து உள்ளது. ◆ இந்த பீட்டா கரோட்டின் சத்து புற்றுநோயினை தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் மாடுகளின் பால் பொன்னிறத்தில் இருக்கும். ◆ இம்மாட்டினங்களின் பாலில் 5 சதவீத அளவு கொழுப்புச்சத்தும், 3.7 சதவீத அளவு புரதச்சத்தும் உள்ளது. ◆ கர்ன்சி மாடுகள் ஒரு வருடத்தில் 6000 லிட்டர்கள் வரை பால் உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. ◆ இம்மாட்டினங்கள் அதிக பால் உற்பத்தி செய்கிறது. ◆ மேலும் கன்று ஈனுவதிலும் சற்று குறைவான சிரம...

கால்நடை சம்பந்தப்பட்ட கேள்வி - பதில்கள்..! Animal Question - Answers

கால்நடை சம்பந்தப்பட்ட கேள்வி - பதில்கள்..! Animal Question - Answers . ❓ கால்நடைகளின் புண்களில் ஈ புழுக்கள் எவ்வாறு உன்டாகின்றது?  ★ ஈயின் இனப்பெருக்கத்தின் ஒரு நிலைதான் ஈ புழு. பசுவின் மூக்கு, வாய், கண், முகம், பிறப்புறுப்பின் வாய் ஆகியவற்றில் கசியும் சளி போன்ற பசை நீரைக் குடித்து ஈக்கள் வாழ்கின்றன. ★ காயங்களிலும், புண்களிலும் ஈக்கள் முட்டையிடுகின்றன. முட்டையிலிருந்து 24 மணி நேரத்தில் ஈ புழுக்கள் வெளிவருகின்றன. ★  கன்று ஈனும் பொழுது கால்நடைகளின் பிறப்புறுப்புகளில் ஏற்படும் காயங்களிலும், கீறல்களிலும் புழுப்புண் ஏற்படும். ★ ஈ புழுக்கள் புண்ணை துளைத்து சதையை உண்ணுகின்றன. சில சமயம் எலும்பு வரைத் துளைத்து சதையே இல்லாமல் செய்துவிடும். பிறந்த கன்றுகளில் கொப்புழ் புழு புண் சாதாரணமாக ஏற்படுகிறது.  ★ 4-6 நாட்கள் சதையை உண்டு வாழும். அதன் பின் கூட்டுப்புழுவாகத் தரையில் விழுந்துவிடும். ❓ மாட்டிற்கு (கருப்பை) அடி தள்ளுவதற்கான காரணங்கள் என்ன? ★  சத்துக்குறைவான பசுக்களில் அடி தள்ளுகிறது. இடுப்பு தசைகள் (இடுப்புக் கட்டு) பலவீனமாக இருக்கும் பொழுதும் அடி தள்ளும். ★ நஞ்சுக் கொடியை போட...

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை !! Herbal treatment for dairy cows in tamil. Mr Animal Care, மடிவீக்க நோய் ( Flatulence)  : சிகிச்சை முறை : ★  கறவை  மாடுகளுக்கு பலவகையான நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதாவது மடிவீக்க நோய், வயிறு உப்புசம், கழிச்சல், கோமாரி வாய்ப்புண், விஷக்கடி போன்றவை ஏற்படலாம். அதற்கான இயற்கை முறை சிகிச்சைகள் பற்றி இங்கு காண்போம். மடிவீக்க நோய் ( Flatulence)  : ★  மடிவீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி மூலமாகவே ஏற்படுகிறது. இந்த நேரத்தில் மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடையதாகவும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். சிகிச்சை முறை : ★  மடிவீக்க நோய்க்கு சோற்றுக்கற்றாழை-200 கிராம், மஞ்சள் பொடி-50 கிராம், சுண்ணாம்பு-5 கிராம் போன்றவை தேவைப்படும். ★ மேற்குறிப்பிட்ட மூன்றையும் நன்றாக கெட்டியாக அரைத்து, பின் ஒரு கை அளவு எடுத்து, அதை நீர் விட்டு கரைத்து, நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவிவிட வேண்டும். இவ்வாறு பூசிவர மடிவீக்கம் விரைவில் குணமடையும். வயிறு உப்புசம் : ★  கால்நடைகளில் வயிறு உப்புசம் என...