கால்நடை சம்பந்தப்பட்ட கேள்வி - பதில்கள்..! Animal Question - Answers

கால்நடை சம்பந்தப்பட்ட கேள்வி - பதில்கள்..!

Animal Question - Answers .

கால்நடைகளின் புண்களில் ஈ புழுக்கள் எவ்வாறு உன்டாகின்றது? 

★ ஈயின் இனப்பெருக்கத்தின் ஒரு நிலைதான் ஈ புழு. பசுவின் மூக்கு, வாய், கண், முகம், பிறப்புறுப்பின் வாய் ஆகியவற்றில் கசியும் சளி போன்ற பசை நீரைக் குடித்து ஈக்கள் வாழ்கின்றன.

★ காயங்களிலும், புண்களிலும் ஈக்கள் முட்டையிடுகின்றன. முட்டையிலிருந்து 24 மணி நேரத்தில் ஈ புழுக்கள் வெளிவருகின்றன.

★  கன்று ஈனும் பொழுது கால்நடைகளின் பிறப்புறுப்புகளில் ஏற்படும் காயங்களிலும், கீறல்களிலும் புழுப்புண் ஏற்படும்.

★ ஈ புழுக்கள் புண்ணை துளைத்து சதையை உண்ணுகின்றன. சில சமயம் எலும்பு வரைத் துளைத்து சதையே இல்லாமல் செய்துவிடும். பிறந்த கன்றுகளில் கொப்புழ் புழு புண் சாதாரணமாக ஏற்படுகிறது. 

★ 4-6 நாட்கள் சதையை உண்டு வாழும். அதன் பின் கூட்டுப்புழுவாகத் தரையில் விழுந்துவிடும்.


மாட்டிற்கு (கருப்பை) அடி தள்ளுவதற்கான காரணங்கள் என்ன?

★  சத்துக்குறைவான பசுக்களில் அடி தள்ளுகிறது. இடுப்பு தசைகள் (இடுப்புக் கட்டு) பலவீனமாக இருக்கும் பொழுதும் அடி தள்ளும்.

★ நஞ்சுக் கொடியை போடுவதற்கு முன் முரட்டுத்தனமாக இழுத்துப் பிடுங்கும் பொழுது ஏற்படும் எரிச்சல் காரணமாகவும் கருப்பை வெளிவருகிறது.

★ கால்சியம் சத்து குறையும் பொழுதும் கருப்பை தள்ளும். ஈஸ்ட்ரோஜன் செயல்பாடு அதிகமாக இருந்தாலும் கருப்பை தள்ளும்.


கால்நடைகளின் கண்ணில் நீர்வடிவதை தடுப்பதற்கான இயற்கை முறை தீர்வு என்ன? 

(குறிப்பு : உங்களுக்கு எளிமையான ஏதாவது ஒரு முறையினை மட்டும் பின்பற்றவும்)

★ 1. நந்தியாவட்டைப்பூ 10, தும்பை பூ 20, கிராம்பு 5 கிராம் எடுத்து இடித்துத் துணி மூலம் சாற்றை வடிகட்டி கண்ணில் விட்டால் குணமாகும்.

★  2. முருங்கைச்சாறு, கீழாநெல்லிச்சாறு இரண்டையும் மூன்று நாட்களுக்கு கண்ணுக்குள் விடவேண்டும்.

★  3. சிறு குறிஞ்சான் இலைச்சாற்றை 2 லிருந்து 4 சொட்டுக்கள் வரை கண்ணில் விட வேண்டும்.


கால்நடைகளுக்கு கொம்பு கழறுதல் எவ்வாறு ஏற்படுகிறது? இதற்கு என்ன செய்ய வேண்டும்? 

★ பசுக்கள் ஒன்றுக்கொன்று சண்டை போடும் பொழுதும், தீவனக் காடியில் மாட்டிக் கொள்ளும் பொழுதும், மேயும் பொழுது மரக் கிளைகளுக்கிடையே சிக்கிக் கொள்ளும் பொழுதும் கொம்பு கழறுகிறது.

★  கொம்புக் குருத்து அப்படியே இருக்கும். அதன் நுனியிலிருந்து மட்டும் சற்று இரத்தம் கசியும். இதற்கு நீங்கள் செய்யும் முதலுதவி தான் சிகிச்சையாகிறது. ஊசி, மருந்து என்று எதுவும் தேவை இல்லை.


பால் காய்ச்சல் வருவதை எப்படித் தடுக்கலாம்?

★  பசுவுக்கு தினமும் 30-50 கிராம் தாது உப்புக் கலவை கொடுத்து வந்தால் இந்த பிரச்சனை வராது.

★  கன்று ஈனுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பும், பின்பும் தௌpந்த சுண்ணாம்பு நீரைப் பசுவுக்கு கொடுக்க வேண்டும்.

★  பால் காய்ச்சலுக்கு மருத்துவரின் உதவியுடன் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.




Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!