கர்ன்சி மாடு பற்றிய தகவல்கள் | Information about the cow in tamil,

கர்ன்சி மாடு பற்றிய தகவல்கள்..! 

Information about the cow  in tamil,

மாடு இனங்கள் (Cow breeds) : 

◆  தற்போது கால்நடை வளர்ப்பு என்பது அனைவரும் செய்துவரும் தொழில் எனலாம். அந்த கால்நடைகளில் நாட்டு மாடு, கலப்பின மாடு மற்றும் அயல் நாட்டு மாடு என பல வகைகள் உள்ளன. அந்த வகையில் அயல் மாட்டினமான கர்ன்சி மாடு பற்றி இன்றைய பதிவில் காணலாம்.

◆  கர்ன்சி மாடு இனங்கள் பிரான்சின் கர்ன்சி எனும் தீவிலிருந்து தோன்றியவை ஆகும். எனவே தான் அந்த மாடுகள் கர்ன்சி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

◆ இந்த மாட்டின் பாலில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. அதாவது அவற்றின் பாலில் பீட்டா கரோட்டின் சத்து உள்ளது.

◆ இந்த பீட்டா கரோட்டின் சத்து புற்றுநோயினை தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் மாடுகளின் பால் பொன்னிறத்தில் இருக்கும்.

◆ இம்மாட்டினங்களின் பாலில் 5 சதவீத அளவு கொழுப்புச்சத்தும், 3.7 சதவீத அளவு புரதச்சத்தும் உள்ளது.

◆ கர்ன்சி மாடுகள் ஒரு வருடத்தில் 6000 லிட்டர்கள் வரை பால் உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது.

◆ இம்மாட்டினங்கள் அதிக பால் உற்பத்தி செய்கிறது.

◆ மேலும் கன்று ஈனுவதிலும் சற்று குறைவான சிரமங்களே காணப்படும். எனவே இவற்றை எளிதாக பராமரிக்க இயலும்.

◆ அயல் நாட்டு இனங்களில் இந்த மாட்டினம் பால் உற்பத்திக்கே எனக்கூட கூறலாம்.

◆ இந்த மாடுகளை வளர்ப்பதால் அதிக லாபம் கால்நடை வளர்ப்பவர்களுக்கு இருக்கும் என்றால் மிகையாகாது.


அசோலாவை வளர்க்கும் முறை..!

How to grow Azolla ..!

◆ அசோலாவை வளர்க்க நிழல்பாங்கான இடத்தைத் தேர்வு செய்து, அதில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட குழி அமைக்க வேண்டும்.

◆ இப்பாத்தியினுள் களைச்செடிகள் வளர்வதைத் தடுக்க பாலித்தீன் சாக்கைப் பரப்பி, அதன் மேல் சில்பாலின் ஷீட்டை ஒரே சீராக மேடு பள்ளம் இல்லாமல் விரிக்க வேண்டும்.

◆ பின்னர், குழியைச் சுற்றி செங்கற்களை வரிசையாக நீளவாக்கில் அடுக்கி வைக்க வேண்டும். சில்பாலின் ஷீட்டின் மேல் 2 செ.மீ. அளவுக்கு மண்ணிட்டு சமன் செய்து, அதன் மேல் 2 செ.மீ. அளவுக்கு தண்ணீர் ஊற்றவும்.

◆ பின்னர் பாத்தியில் நிலத்தின் மண் 20 கிலோ, சாணம் அரை கிலோ, வேப்பிலை அரைகிலோ, முருங்கைக்கீரை அரைகிலோ, பாறைத்தூள் 2 கிலோ மற்றும் 5 வாழைப்பழம் ஆகிய அனைத்து பொருட்களையும் போட்டு நன்றாக கலக்கி விட வேண்டும்.

◆ இப்பாத்தியில் 5 கிலோ அசோலா தாய்வித்து தூவ வேண்டும். பாத்தியிலுள்ள மண்ணை தினமும் காலை, மாலை கலக்குவதால், மண்ணிலுள்ள சத்துக்கள் தண்ணீரில் கரைந்து அசோலாவின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.

◆  அசோலா பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்துவிடும். பின்பு நாள் ஒன்றுக்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை அறுவடை செய்யலாம். ஒரு பாத்தியில் 15 நாட்களில் 30 முதல் 40 கிலோ அசோலா உற்பத்தியாகும்.

◆ ஒரு சதுர செ.மீ ஓட்டை அளவுள்ள சல்லடையை பயன்படுத்தி அறுவடை செய்யலாம். அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசினால் சாணத்தின் வாசனை இல்லாமல் இருக்கும்.

◆ அசோலாவை சல்லடை கொண்டு அலசும்போது கிடைக்கும் நீரில் உள்ள சிறிய அசோலா நாற்றுகளை திரும்ப பாத்தியில் ஊற்றலாம். அசோலாவை அறுவடை செய்யும்போது மூன்றில் இரண்டு பங்கை அறுவடை செய்துவிட்டு, ஒரு பங்கை பாத்தியிலேயே விட்டுவிட வேண்டும்.

◆ பாத்தியில் 10 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ பசுஞ்சாணம் கரைத்து விடுவது நல்லது. அசோலா தாய்வித்தைத் தவிர அனைத்து இடுபொருள்களையும் 6 மாதத்துக்கு ஒரு முறை சரியான அளவுகளில் இட வேண்டும்.







Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!