மானியத்துடன் பால் பண்ணை அமைக்க கடன் திட்டம் !!

மானியத்துடன் பால் பண்ணை அமைக்க கடன் திட்டம் !!

Loan plan to set up milk farm with subsidy !!

Mr Animal Care

மானியத்துடன் பால் பண்ணை அமைக்க கடன் திட்டம் !!

Mr Animal Care

◆  பரம்பரையாக மாடு வளர்ப்பவர்கள் பலரும் பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லாமல் வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் சரியாகத் திட்டமிட்டு செய்தால் பால் பண்ணையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும். இப்போது மானியத்துடன் பால் பண்ணை அமைப்பது எப்படி என்று பார்ப்போம்.


திட்டம் :

◆ இந்த திட்டம் மூலம் மாட்டுப்பண்ணை அமைக்க நபார்டு வங்கியின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. 

◆ மேலும் இந்த திட்டத்தின் மூலம் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க 6 லட்சம் வரை கடன் பெற முடியும்.


யார் எல்லாம் கடன் வாங்கலாம் :

◆ இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட கடன் பெறலாம்.

◆ மேலும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பண்ணை வைக்கும் போது அவர்களது பண்ணை 500 மீட்டருக்கு மேல் தள்ளி இருக்க வேண்டும். இவர்கள் ஓரே ஒரு முறை மட்டுமே கடன் பெற முடியும்.


நபார்டு வழங்கும் கடன் திட்டங்கள் :

◆ இந்த திட்டத்தில் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25மூ மானியம் பெறலாம். தாழ்த்தப்பட்டோர் 33.33மூ மானியம் பெறலாம். 

◆ அதுமட்டுமல்லாமல் சிறிய கன்று குட்டிகள் வளர்க்கும் திட்டத்தின் மூலம் 20 கன்று குட்டிகள் வரை வாங்கலாம். இதற்காக ரூ.5.30 லட்சம் வரை கடன் தொகை பெற முடியும்.

◆ மேலும் மாட்டுச்சாணத்தில் இருந்து மண்புழு உரம் தயாரிப்பதற்காக கடன் திட்டத்தின் கீழ் ரூ.22000 வரை கடன் பெற முடியும்.

◆ பிறகு பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் பால் குளிரூட்டும் இயந்திரம் வாங்கும் கடன் திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.

◆ இவ்வாறு பால் பண்ணை மற்றும் பால் குளிரூட்டும் பதனக் கிடங்கில் இருந்து பால் பொருட்களை எடுத்து செல்லும் வாகனம் வாங்க ரூ.26.50 லட்சம் வரை கடன் பெற முடியும்.

◆ பெரிய பால் பண்ணை உள்ளவர்களுக்கு பால் குளிரூட்டும் பதனக் கிடங்கு அமைப்பதற்கு ரூ.33 லட்சம் வரை வங்கியின் மூலம் கடன் பெறலாம்.

◆ மேலும் தனியார் கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கும் கடன் பெறலாம். இதில் நடமாடும் கிளினிக் அமைக்க ரூ.2.60 லட்சமும், நிலையான கிளினிக் அமைக்க ரூ.2 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.

◆ அதே போல் பால் விற்பனை நிலையம் அமைத்து பால் பொருட்களை விற்பனை செய்யவும் ரூ.1 லட்சம் வரை கடன் பெறலாம். 

◆ மானியத்துடன் பால் பண்ணை அமைக்க வங்கி கடன் உதவி பெறுவது எப்படி என்று பார்த்தோம். இங்கு அதன் தொடர்ச்சியை காண்போம்.


கடன் வாங்கும் வழிமுறைகள் :

◆ பால் பண்ணை அமைக்க கடன் வாங்க பல விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவற்றை எல்லாம் சரியாக கடைப்பிடித்தால் கடன் வாங்கலாம்.

◆ கடன் பெறுபவரின் வயது 65க்கு மேல் இருக்கக்கூடாது. மேலும் பத்து மாடுகளுக்கும் தேவையான தீவனம் வளர்க்க இரண்டு அல்லது ஒரு ஏக்கர் வரை சொந்த நிலம் இருக்க வேண்டும்.

◆ அதே போல் கூட்டுறவு பால் சங்கம் அல்லது பிரபல பால் நிறுவனங்களுக்கு பால் வழங்குபவராக இருக்க வேண்டும்.

◆ மேலும் கறவை மாடு என்றவுடன் எந்த மாட்டையும் வாங்கிட முடியாது. அது தரமான கறவையாக இருக்க வேண்டும். கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாடுகளை வாங்குவது முக்கியமாகும்.

◆ பயனாளிகள் ஐந்து லட்சம் வரை கடன் கொடுப்பதால், பால் பண்ணை நவீனமாக, அதாவது, புல் வெட்டும் இயந்திரம், பால் கறக்கும் இயந்திரம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இவையெல்லாம் வேலை பளுவைக் குறைப்பதோடு, பால் உற்பத்தியையும் பெருக்க உதவுகிறது.

◆ அதே போல் கடன் பெற்று பால் பண்ணை வைக்கும்போது வங்கி அதிகாரிகளின் ஆய்வு அடிக்கடி இருக்கும். எனவே, பண்ணையைச் சுத்தம், சுகாதாரத்துடன் பராமரிப்பது மிக முக்கியம் ஆகும்.


கடன் வழங்கும் வங்கிகள் :

◆ வணிக வங்கிகள் 

◆ கிராம மற்றும் நகர்ப்புற வங்கிகள்  

◆ மாநில கூட்டுறவு வங்கிகள், மாநில வேளாண் கூட்டுறவு வங்கிகள் 

◆ நபார்டு வங்கியில் மறுசுழற்சி நிதி பெறும் நிதி நிறுவனங்கள் 

◆ நபார்டு வங்கியில் கடன் பெறும் திட்டங்களுக்கு இது பொருந்தும்.


விண்ணப்பிக்கும் காலம் :

◆ மேலே குறிப்பிட்டுள்ள வங்கிகள் மூலமாக நபார்டு வங்கிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

◆ தகுதியான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடன் வழங்கப்படும். அதே போல் தொழில்முனைவோர்கள் தங்களின் திட்ட அறிக்கைகளை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

◆ வங்கிகள் அதனை பரிசீலனை செய்து சரியாக இருக்கும் பட்சத்தில் முதல் தவணை பணம் கொடுக்கப்பட்ட பின் வங்கியை அணுகி மானியத்தினைப் பெற்று கொள்ளலாம்.

◆ இவை அனைத்தையும் அந்தந்த பகுதியில் உள்ள நபார்டு கிளை அலுவலகத்தில் இரண்டு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 3 முதல் 7 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.


Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!