உதைக்கின்ற கறவை மாடு மற்றும் எருமையில் பால் கறக்கும் முறை !!
உதைக்கின்ற கறவை மாடு மற்றும் எருமையில் பால் கறக்கும் முறை !!
உதைக்கின்ற கறவை மாடு மற்றும் எருமையில் பால் கறக்கும் முறை !!
Mr Animal Care,
★ கறவை மாடு மற்றும் எருமை மாடுகளின் மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடுவதில்லை. எருமை மற்றும் பசு பால் கறக்கும் போது உதைக்கின்றது.
★ மேலும் கறவை மாடு மற்றும் எருமை மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடவில்லை என்றால் இந்த பிரச்சனையை சரி செய்ய இயற்கை முறையில் தீர்வு என்ன என்று பார்ப்போம்.
இதற்கு தேவையான பொருட்கள் :
ஜாதிக்காய் - 2 எண்ணிக்கை
விரலி மஞ்சள் - 10 கிராம்
★ முதலில் இந்த ஜாதிக்காய் மற்றும் விரலி மஞ்சளை நன்றாக பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.
★ பின்னர் கறவை பசு மற்றும் எருமையில் பால் கறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அடர் தீவனத்திலோ அல்லது தண்ணீரிலோ இந்த ஜாதிக்காய் விரலி மஞ்சள் கலந்த பொடியை கறவை மாட்டிற்கு அரை ஸ்பு+ன் மற்றும் எருமை மாட்டிற்கு ஒரு ஸ்பு+ன் என்ற அளவில் கலந்து கொடுக்க வேண்டும்.
★ அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து பால் கறக்கும் போது பசு மற்றும் எருமை அமைதியாக இருக்கும். பின்னர் கறவை மாடுகள் மற்றும் எருமை மாடுகளில் பால் கறக்கலாம்.
பால் உற்பத்தியை அதிகரிக்கும் மக்காச்சோள கழிவு !!
★ மக்காச்சோள கழிவு, பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால் வறட்சியால், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், தவிடு, புண்ணாக்கு, தீவனத்தின் விலையும், கடுமையாக உயர்ந்துள்ளது.
★ தீவன பற்றாக்குறையை சமாளிக்க விவசாயிகள் குறைந்த விலையில் கிடைக்கும் மக்காச்சோள கழிவை, மாடுகளுக்கு கொடுப்பதால், அதிகளவு பால் உற்பத்தி மற்றும் பாலில் உள்ள கொழுப்புச்சத்து அதிகரிக்கிறது.
★ கால்நடைகளின் தீவனங்களின் விலை உயர்வால், மாடு ஒன்றுக்கு, தீவன செலவு, மாதத்துக்கு அதிகளவு செலவாகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது கிடைக்கும் பால் விலைக்கு, இது கட்டுபடியாகவில்லை.
★ இதை கருத்தில் கொண்டு விவசாயிகள் குறைந்த விலையில் கிடைக்கும் மக்காச்சோள திப்பியை, மாடுகளுக்கு கொடுப்பதால், பால் அளவு அதிகரிக்கிறது.
★ மேலும் ஒரு மாட்டுக்கு, குறைந்த அளவே, மாதத்துக்கு செலவாகிறது.
Comments
Post a Comment