நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்கள் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் ..!!!

நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்கள் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் ..!!!


நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்கள் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் ..!!!

Mr Animal Cere

நோய்க்கான காரணங்கள் :

★ கறவை மாட்டின் உணவுப் பாதையில் வாழும் நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்கள் போன்றவைகளும், காக்சிடியா எனப்படும் ஓரணு வகை ஒட்டுண்ணியும் மாட்டின் ஆரோக்கியத்தை மிகவும் பாதித்து உற்பத்தியைக் குறைக்கின்றன. 

★ இத்தகைய ஒட்டுண்ணிகள், மாட்டின் இரத்தத்தை உறிஞ்சியோ அல்லது மாட்டிற்கு சேர வேண்டிய உணவுப் பொருட்களைத் தாம் உண்டோ வாழும். 

★ உணவு சரிவர குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுத்தோ அல்லது சில நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்து குடற்பகுதியைத் தாக்கியோ மாட்டின் நலத்தைக் கெடுக்கின்றன. 


நோய் அறிகுறிகள் :

★ கன்றுகள், மாடுகள் நாளடைவில் மெலிந்து சோகையுற்றுக் காணப்படும். சரிவர தீவனம் உட்கொள்ளாது. 

★ பற்களை அடிக்கடி நறநறவென்று கடித்தல், உடலில் அதிக ரோமம் வளர்தல், ரோமம் சிலிர்த்துக் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். 

★ வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படும். சாணம் தண்ணீர் போல இருப்பதுடன் நுரையும் காணப்படும். சிகிச்சை செய்யாவிடில் மாடுகள் இறந்துவிடும். 


தடுப்பும், பாதுகாப்பும் :

★ சுகாதார விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். போதிய ஊட்டச்சத்து அளிக்க வேண்டும். 

★ தண்ணீர், தீவனம், புல் போன்றவற்றில் உள்ளுறை ஒட்டுண்ணியின் முட்டையோ அல்லது லார்வாவோ இருக்கக் கூடாது. சாணத்தை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும். 

★ கம்போஸ்ட் செய்த சாணத்தை எருவாகப் பயன்படுத்த வேண்டும். 

★ இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சாணத்தை, பரிசோதனை செய்து உள்ளுறை ஒட்டுண்ணி இருப்பின் மருந்து கொடுக்க வேண்டும். 

★ மாடுகளை அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டும், நன்றாக கவனித்து கொண்டும் இருத்தல் வேண்டும். 

★ இவ்வாறு கால்நடைகளைச் சரிவர பராமரிப்பு செய்தாலே நோய் தாக்குதலிருந்து விடுபடலாம். 








Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!