நாக்குப்பூச்சி நோய் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..
நாக்குப்பூச்சி நோய் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!
நாக்குப்பூச்சி நோய் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!
Mr Animal Care,
நாக்குப்பூச்சி நோய்
★ இந்நோய் நாக்குப்பூச்சி என்ற உருண்டைப்புழுவினால் ஏற்படுகிறது. இந்நோயின் தாக்கம் இளம் கன்றுகளில்தான் காணப்படும்.
★ குறிப்பாக எருமைக் கன்றுகளில் அதிகமாகக் காணப்படும். இந்த உருண்டைப் புழுக்களின் இளம் புழுப்பருவம் சீம்பால் வழியாகத் தாய் மாட்டிலிருந்து இளம் கன்றுகளுக்குச் செல்கிறது.
★ இந்த இளம் புழுப்பருவம் கன்றுகளின் குடலில் 25 செ.மீ நீளம் வரை வளர்ந்து நோயை உண்டாக்குகின்றன.
★ இந்நோயினால் பாதிக்கப்பட்ட கன்றுகளில் களிமண் நிறத்தில் கொழுப்பு கலந்த கழிச்சல் காணப்படும்.
★ சாணம் துர்நாற்றத்துடன் இருக்கும். மேலும் புழுக்களின் நச்சுகளினால் வயிற்றுவலி ஏற்படும். புழுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கன்றுகள் இறக்க நேரிடும்.
★ பரிசோதனை செய்து புழுக்களின் முட்டைகள் உள்ளதா என்று பார்த்து இந்நோயைக் கண்டறியலாம்.
★ நோய்த் தாக்கம் காணப்பட்ட கன்றுகளுக்குக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி குடற்புழு நீக்க மருந்தளிக்க வேண்டும்.
விஷக்கடி :
★ விஷத்தன்மையுள்ள உயிரினங்களான தேள், குளவி, வண்டு, பு+ரான், அரணை மற்றும் சிறு பாம்புக் கடியினால் தோலில் தடிப்பு, உடல் வீக்கம், வயிறு உப்புசம், வாயில் நீர் வடிதல், முச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் மாடுகளில் தென்படும்.
★ தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : உப்பு - 15 கிராம், தும்பை இலை - 15 எண்ணிக்கை, சிறியா நங்கை (இலை), (நில வேம்பு) - 15 எண்ணிக்கை, மிளகு - 10 எண்ணிக்கை, சீரகம் - 15 கிராம், வெங்காயம் - 10, வெற்றிலை - 5 எண்ணிக்கை, வாழைப்பட்டை சாறு - 50 மி.லி.
சிகிச்சை முறை :
★ சின்ன சீரகம், மிளகினை இடித்து பின்பு இதனை மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி, 100 கிராம் கருப்பட்டி (பனை வெல்லம்) கலந்து உப்பில் தொட்டு நாக்கின் மேல் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.
Comments
Post a Comment