கோமாரி நோயால் வரும் புண் மற்றும் அதற்கான சிகிச்சை முறை..!

கோமாரி நோயால் வரும் புண் மற்றும் அதற்கான சிகிச்சை முறை..!


கோமாரி வாய்ப்புண் :

கோமாரி கால் புண்  :

சிகிச்சை முறை : 

(வெளி பூச்சு மருந்து)

மாட்டுக்கு வாயில் அடிக்கடி கொப்புளங்கள் வருதல் : 

Mr Animal Care,

கோமாரிகோமாரி வாய்ப்புண் :

★  வாய்ப்புண் ஒரு நச்சுயிரி நோயாகும். இது மாடு, ஆடு மற்றும் பன்றிகளைத் தாக்குகிறது. வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். 

★ எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். 

★ பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மடியில் கன்றுகளை பால் ஊட்ட விடுதல் கூடாது. 

★ ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :


★ தேங்காய் துருவல் - 1 தேங்காய் (பால் கட்டியது), சீரகம் - 50 கிராம், வெந்தயம் - 30 கிராம், மஞ்சள் பொடி - 10 கிராம், கருப்பட்டி (பனை வெல்லம்) - 20 கிராம் எடுத்து கொள்ள வேண்டும்.


சிகிச்சை முறை - மாடு ஒன்றுக்கு உள் மருந்து : (வாய் வழியாக)

★ சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி அரைத்து தேங்காய் துருவலுடன் கலந்து நோய் கண்ட மாடு ஒன்றுக்கு தினமும் இருவேளை குறைந்தபட்சம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். 


★  ஐந்து நாட்கள் கொடுக்க கால்நடைகள் நன்றாக குணமடைகிறது. மாட்டின் தலையைத் தூக்கிப்பிடித்து இரு கடைவாய் பகுதியிலும் மெதுவாக உள்ளே செலுத்த வேண்டும்.


கோமாரி கால் புண் :

★  தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : குப்பைமேனி - 100 கிராம், பு+ண்டு - 10 பல், மஞ்சள் - 100 கிராம், இலுப்பை எண்ணெய் (அல்லது) நல்லெண்ணெய் - 250 கிராம் எடுத்து கொள்ள வேண்டும்.


சிகிச்சை முறை : (வெளி பூச்சு மருந்து)

★  முதல் மூன்று பொருட்களை இடித்து இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பாதிக்கப்பட்ட கால்நடையின் கால்களை உப்பு, மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தைச் சுத்தமான காய்ந்த துணியால் ஒற்றி எடுத்து பின் மேற்கண்ட மருந்தை இட வேண்டும்.


மாட்டுக்கு வாயில் அடிக்கடி கொப்புளங்கள் வருதல் : 

★  வேப்பம் கொழுந்து, மஞ்சள், கல் உப்பை நன்கு அரைத்து கொப்புளங்கள் உள்ள இடங்களில் தடவி விடலாம். 

★ இதேபோல் காலில் இருந்தாலும் தடவி விட்டால் விரைவில் குணமாகிவிடும்.









Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!