கால்நடைகளுக்கு வரும் தோல் நோய் - அதற்கான தடுப்பு முறை..!

கால்நடைகளுக்கு வரும் தோல் நோய் - அதற்கான தடுப்பு முறை..!

Mr Animal  Care,



கால்நடைகளுக்கு வரும் தோல் நோய் - அதற்கான தடுப்பு முறை..!

Mr Animal  Care,

படர் தாமரை :

★ படர் தாமரை நோய் டிரைக்கோஃபைட்டான் வெருகோசம் என்னும் ஸ்போர் உண்டாக்கும் பூஞ்சைகளால் தோற்றுவிக்கப்படுகிறது. 

★ இது மனிதர்களையும் தாக்குகிறது. அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாது. 

★ இப்பூஞ்சையின் பாதிப்பால் ஸ்போர்கள் முளைத்து கால்நடையின் தோல், முடி போன்றவற்றை பாதிக்கிறது.

★  தோலில் இன் நோய் பாதித்த இடத்தில்லிருந்து சாறு போன்ற திரவம் வெளியேரி அதன் ஒவ்வாமையால் தோல் பகுதியில் புண்கள் உண்டாக்குகிறது. 

★  தோலைச்சுற்றிலும் வெளிச்சாம்பல் நிறம் தோன்றும். தலை மற்றும் கழுத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. 

★  இது முடிவயற்ற ஒரு வட்டவடிவ வெண்சாம்பல் நிறத்தில் பல அறிகுறியை உடல் முழுதும் ஏற்படுத்துகிறது.

★  இந்த படர் தாமரை நோய் தானாகவே சரிசெய்யக்கூடியது, அதாவது மாடுகளைச் சுத்தமாகவும், தண்ணீர் தேங்கும் இடத்தில் கட்டி வைக்காமலும் பாதுகாக்கலாம்.

★  படர்தாமரை நோய் வராமல் தடுக்க மாட்டின் மேல்புறத்தில் வேப்ப எண்ணெய், சோற்றுக்கற்றாழையைப் பூசி விடுவதன் மூலம் தடுக்கலாம்.


தெள்ளுப்பூச்சி :

★ தெள்ளுப்பூச்சி தோல் நோயைத் தோற்றுவிக்கிறது. இதன் தொடர்ச்சி தோல் முழுவதும் பரவுகிறது. 

★  இத்தொழு நோய் சார்கோப்டிக், பூச்சிகளால் ஏற்படுகிறது. கோரியோப்டஸ், டெமோடெக்ஸ் மற்றும் சாரா கேட்ஸப் பூச்சிகள் லேசான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. 

★  இது தொடர்பு மூலம் பரவுகிறது. அதாவது ஒரு மாட்டிலிருந்து மற்றொரு மாட்டிற்கு பரவுகிறது. 

★ இன்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் தோல் கடினமாகி முடி உதிர்ந்து விடும். இப்பூச்சி அதிக அளவு பெருகினால் கால்நடை நலிவடைந்து விடும். 

★ இவை தோல் குழியில் மறைந்து கொள்வதால் கட்டுப்படுத்துவது கடினம். 

★ எனவே ஊசி மூலம் உட்செலுத்தும் மருந்துகளை உபயோகித்து நீக்கலாம். மாடுகளின் கொட்டகை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

★ மாட்டு கொட்டகைகளில் அடிக்கடி மூலிகை புகை மூட்டம் போட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பூச்சிகளை விரட்டலாம்.






























Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!