மாட்டு மடிக்காம்பு வெடிப்பு - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!
மாட்டு மடிக்காம்பு வெடிப்பு - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!
Cow hip rupture - symptoms and prevention methods .. !!
மாட்டு மடிக்காம்பு வெடிப்பு - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!
Mr Animal Cere
அறிகுறிகள் :
◆ கறவை மாடுகளின் மடியில் காயம் மற்றும் வெடிப்புகள்
◆ மடி வீக்கமாக காணப்படும்.
◆ சில நேரங்களில் மடியிலிருந்து இரத்தக்கசிவு ஏற்படும்.
தடுப்பு முறைகள் :
◆ கறவை மாடுகளின் மடியில் காயம் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டால் மூலிகை முதலுதவி செய்வதன் மூலம் கறவை மாடுகளில் பொருளாதார இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். முதலில் மடியைக் கழுவி கீழ்க்கண்ட முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.
◆ ஒரு லிட்டர் சுத்தமான நீரில் ஒரு கரண்டி (5 கிராம்) மஞ்சள்தூள் மற்றும் ஒரு கரண்டி (5 கிராம்) கல் உப்பு கலந்து நீரைக் கொதிக்க வைத்து ஆறியவுடன் மடி மீது தௌpத்து சுத்தமாகக் கழுவ வேண்டும்.
◆ மேற்கூறிய நீரில் கழுவிய மடி மற்றும் காம்பு பகுதியை நன்கு உலர்ந்த சுத்தமான பஞ்சு துணியினால் ஈரம் உறிஞ்சும்படி ஒற்றித் துடைக்க வேண்டும்.
தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :
◆ மஞ்சள் தூள் 10 கிராம், பு+ண்டு 4 பல், குப்பைமேனி 10 இலை, வல்லாரை 10 இலை, வெண்ணெய் 50 கிராம்.
செய்முறை :
◆ மேற்கண்ட பொருட்களை வெண்ணெய் நீங்கலாக ஒன்று சேர்த்து அரைத்து, நீர் மற்றும் கை படாமல் ஒரு கரண்டியில் வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வெண்ணெய் கலந்து கொள்ளவும்.
◆ இதை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தலாம். மறுநாள் புதியதாக மருந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை :
◆ மடிக்காம்பில் காயம் மற்றும் வெடிப்பு ஏற்பட்ட கால்நடைகளுக்கு மேற்கூறிய முறையில் மடிப்பகுதியை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துணியால் துடைத்து மேற்கூறிய மருந்து கலந்து வெண்ணெயை கையில் எடுத்து வெடிப்பு மற்றும் காயம் உள்ள பகுதிகளில் மென்மையாக தடவி விடலாம்.
◆ மாடுகள் கீழே படுத்து எழும்போது மடி மற்றும் காம்புப் பகுதிகள் அழுக்காகி விடும். எனவே இந்த மருந்தினை மடி மற்றும் காம்புப் பகுதியைச் சுத்தம் செய்து கறவை செய்யும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் பலமுறை தடவி விட வேண்டும்.
◆ எக்காரணம் கொண்டும் மடியில் உள்ள காயம் மற்றும் வெடிப்பு உள்ள பகுதிகள் காய்ந்த நிலையில் இருக்கக் கூடாது.
◆ மருந்து எந்த நேரமும் காயம் மற்றும் வெடிப்பு உள்ள பகுதிகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment