முட்டைக் கோழி வளர்ப்பு
முட்டைக் கோழி வளர்ப்பு..!
Poultry farming ..!
Mr Animal Care,
முட்டைக் கோழி வளர்ப்பு..!
நம் நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந்தும், நாட்டு மக்கள் அறிவுத்திறனில் உயர்ந்தும், சிறந்தும் விளங்குகின்றனர். நாம் அனைவரும் உழைப்பை உயர்வாக எண்ணி, ஆற்றலுடன் செயல்பட்டால் நம்நாடு. மிக வேகமாக வளர்ச்சியடையும். ஆனால், நம்நாட்டில் உள்ள இளைஞர்கள், நமது படிப்பை முடித்துவிட்டு, சுயவேலை வாய்ப்புக்கு அநேக வசதிகள் மற்றும் வாய்ப்பிருந்தும், அரசு மற்றும் தனியார் துறை வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். சுயவேலை வாய்ப்பில் ஈடுபட்டால் முன்னேற முடியாதோ என்ற பயம் உள்ளது. ஆனால், தற்போது சுயவேலை வாய்ப்புத் திட்டம், சிறந்த திட்ட மாக உள்ளது, நன்கு திட்டமிட்டுச் செயல்பட்டால் நிரந்தர வருவாய் கிடைத்து முன்னேற, சிறந்த வாய்ப்புள்ளது. அத்தகைய சுயவேலை வாய்ப்புத் திட்டத்திற்கு. 'முட்டை கோழி வளர்ப்பு" சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கோழியினத்தை வசப்படுத்தி, வீட்டில் வளர்க்கும் கலை ஏற்றுக் கொள்ளப்பட்டது. நம் நாட்டில் வாத்து, வான் கோழி, கோழி மற்றும் காடை வளர்ப்பு நடைமுறையில் இருந்தாலும், முட்டைக் கோழி மற்றும் வளர்ப்பே, கோழியின வளர்ப்பில் பெரும்பங்கு வகிக்கின்றது. ஆதிகாலம் தொட்டு நம்நாட்டில் புழக்கடை கோழி வளர்ப்பு என்பது கிராம மக்களுக்குச் சிறிது பணம் சேர்ப்பதற்கும். தங்கள் குடும்பத்தின் புரதத் தேவையை ஈடுசெய்வதற்கும் ஏற்ற சிறந்த தொழிலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு. இன்றும் நம் நாட்டில் கிராமந்தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இருந்தாலும் 1955-ஆம் ஆண்டு வாக்கில் வெளிநாடுகளில் இருந்து வீரிய இன அதிக முட்டையிடும் கோழிகளைத் தருவித்து, அதிக அளவில் வளர்த்து. தற்போது 'முட்டைக் கோழி வளர்ப்பு' என்பது ஒரு தொழிலாக, நல்ல இலாபம் ஈட்டித்தரும் தொழிலாக மாறி நடைபெற்று வருகின்றது. கடந்த 30 ஆண்டுகளாகக் கோழி வளர்ப்புத் தொழில், பெரிதும் மாற்றமடைந்து சரியான பாதையில் சென்று நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றது.
இந்தியாவில் கடந்த 1961-ஆம் ஆண்டில் 64 மில்லியன் முட்டையிடும் கோழிகள், 2881 மில்லியன் முட்டைகள் இட்டுச் சாதனை புரிந்து, தற்போது 1998-இல் 180 மில்லியன் கோழிகள். 35000 மில்லியன் முட்டைகள் இட்டுப் பெரும் சாதனை புரிந்துள்ளன.
இது போன்ற மிகப்பெரிய சாதனையை எந்த விவசாயம் சார்ந்த தொழிலும் இத்தனை குறுகிய காலத்தில் அடைந்ததில்லை. இந்தியாவின் மக்கள் தொகை 97.5 கோடியாகும். தமிழ்நாட்டின் மக்கள் தொகை 5 கோடியாகும். நம் மக்களிடையே
புரதச்சத்து தேவை மிகவும் அதிகமாக உள்ளது. பரிந்துரை செய்யப்பட்ட முட்டை உண்ணும் அளவு. தினமும் அரைமுட்டையாகும். இறைச்சியின் அளவு, ஆண்டுக்கு 22 கிலோகிராம். ஆனால் தனி நபருக்குக் கிடைக்கின்ற முட்டையின் அளவு, ஆண்டுக்கு 32 முட்டைகளாகும். இறைச்சி 654 கிராம் ஆகும். இந்தக் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி. கோழிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தல்ல. அவற்றினுடைய உற்பத்தித்திறன், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சி, அதன் வாயிலாகப் பெரிய அளவில் உற்பத்தியில் சாதனை ஏற்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தில், கோழி வளர்ப்புத் தொழில். மிகப் பெரிய பங்காற்றி வருகின்றது. கோழி வளர்ப்பு மூலமாக 1980-ஆம் ஆண்டில் 800 கோடி ரூபாயாக இருந்த மதிப்பு, 1996-இல் ரூபாய் 9500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கோழிப்பண்ணைத் தொழில் தவிர, அதனைச் சார்நத குஞ்சு பொரிப்பகத் தொழில், தாய்க் கோழிப் பராமரிப்பு. கோழித் தீவனம் தயாரித்தல், கோழிகளுக்காக மருந்துப் பொருட்கள் தயாரிப்புத் தொழில், உபகரணங்கள் தயாரிப்புத் தொழில், பதப்படுத்துதல் மற்றும் வியாபாரம் சம்பந்தப்பட்ட ஏராளமான கோழிவளர்ப்புத் தொழில்கள் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகின்றது. இத்தகைய மிகப்பெரிய கோழி வளர்ப்புத் தொழில் வளர்ச்சிக்கு தனியார் துறையும் மற்றும் அரசும் பெரும்பங்காற்றி வருகின்றன. அரசு, தாய்க்கோழிகள் இறக்குமதிக்கும், தேவையான மிக நவீனமான உபகரண இறக்குமதிக்கும் உதவி செய்து. கோழி வளர்ப்புத் தொழில் வளர்ச்சியடைய, முயற்சி மேற்கொண்டு வருகின்றது. தனியார் துறையின் மூலம் தேவையான கட்டுமான அமைப்பிற்கும், நிதியுதவி மற்றும் தொழில் முனைவோருக்கான ஊக்கம் அளிக்கப்பட்டு கோழிப்பண்ணை வளர்ச்சி, தற்போதுள்ள மேன்மையான நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
Comments
Post a Comment