கழல் நோய் மற்றும் தொடை வீக்க நோய்..!

கால்நடைகளைத் தாக்கும் நோய்கள்..!

கழல் நோய் மற்றும் தொடை வீக்க நோய்..!

Tuberculosis and Femoral Inflammation ..!

Mr Animal Care,

கழல் நோய் மற்றும் தொடை வீக்க நோய்..!

Tuberculosis and Femoral Inflammation ..!

கழல் நோய் கண்ட மாடுகளில் காய்ச்சல் அதிகமாக இருக்கும். கருச்சிதைவு 7-9 மாதத்தில் நிகழும். நஞ்சுக் கொடி எளிதில் விழாது. 


இது லிஸ்டிரியா மோனோசைட்டோஜீன்ஸ் என்னும் பாக்டீரியத்தினால் ஏற்படுகிறது. 


மண், சாணம், புல் போன்ற எல்லா இடங்களிலும் இருக்கும். 

இந்த உயிரி மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. 



கால்நடை மட்டுமின்றி ஆடுகள், பன்றி, நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளிலும் ஏற்படுகிறது. 


அமைதியின்மை, பசியின்மை, மிகுந்த காய்ச்சல் போன்றவை மாறிமாறி வருவதால் இது சுற்று நோய் எனப்படுகிறது. 


அறிகுறிகள் தெரிந்த 2 - 3 நாட்களுக்குப்பின் பாதிக்கப்பட்ட விலங்கு இறந்து விடும். கால்நடைகளாக இருந்தால் 2 வாரங்கள் வரை உயிர் வாழும்.


கொட்டகைகளில் மாடுகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். 


பதப்படுத்தப்பட்ட தீவனம் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். 


நல்ல எதிர்ப்புச் சக்தி உள்ள ஆரோக்கியமான மாடுகள் இந்நோயினால் பாதிக்கப்படுவதில்லை. ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்து விட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம். 


தொடை வீக்க நோய் :


தொடை வீக்க நோய் ஏக்டினோமைசில் போவிஸ் என்ற உயிரியால் பரவுகிறது. 


இது மாடுகளின் தொடையில் பெரிய அளவிளான நகர்த்த முடியாத கட்டியை உருவாக்குகிறது. 


செம்புல் போன்ற புற்கள் உண்ணும் போது, அவை மாடுகளின் வாய் ஓரங்களில் சிறிது கிழித்துவிடுகிறது. இந்த இடுக்கு வழியே இவ்வுயிரி புகுந்து விடுகிறது. 


இந்தக் கட்டி பெரியதாகி கண்ணுக்கு தெரிய சில மாதங்களாகும். இதற்குள் இது சற்று முதிர்ந்து விடும். 


இந்தக் கட்டியில் மஞ்சள் நிற சீழ் போன்ற திரவம் எலும்பு இடுக்குகளில் தேங்கும். 


கவனிக்காவிடில் கட்டி பெரிதாகி உடைந்து அதிலிருந்து மஞ்சள் நிற சீழ் வெளிவர ஆரம்பித்து விடும்.


நாசி எலும்புகளை பாதிப்பதால் மூச்சுவிடுவது சிரமமாக இருக்கும். மெல்வதற்குக் கடினமாக இருப்பதால் மாடு உணவு உட்கொள்ளாது.


கட்டி ஏற்பட்டால் உடனே கால்நடையை நல்ல நிலையிலிருந்தாலும் உடனே மந்தையிலிருந்து அகற்றி, தனியே வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில், கட்டி உடலின் பிற பாகங்களுக்குப் பரவ ஆரம்பித்து விடும்.












Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!