பசுந்தீவன வகைகளும், அதன் நன்மைகளும்..!

பசுந்தீவன வகைகளும், அதன் நன்மைகளும்..!

Green fodder varieties and its benefits ..!

Mr Animal Care,

பசுந்தீவன வகைகளும், அதன் நன்மைகளும்..!

Green fodder varieties and its benefits ..!

★ கால்நடைகள்  வளர்ப்பதன் மூலமாக விவசாயிகள் நீடித்த வேளாண்மையை எளிதில் செய்யலாம்.

★ அதே போல் நல்ல லாபம் தரும் காய்கறிகள், பழங்கள் மூலம் வருமானம் பெறுவதை விட தீவன மரங்கள், பசுந்தீவன வகை தாவரங்களையும் தனியாகவோ, வரப்புப் பயிராகவோ, கலப்பு பயிராகவோ வளர்க்கலாம். 

★ வேலிப் பயிராகவும் பராமரித்தால் லாபம் உண்டு. அதுமட்டுமல்லாமல் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்தால் கால்நடை வளர்ப்பில் ஏற்படும் செலவை கணிசமாக குறைக்கலாம். அதை பற்றி இங்கு காண்போம்.

பசுந்தீவனம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் : 

★  கால்நடை வளர்ப்பவர்கள் பால் உற்பத்தி செலவில் 70 சதவீதம் தீவனத்திற்கே செலவாகிறது. எனவே அவர்கள் வளர்க்கும் கால்நடை பால் உற்பத்தியில் அடர் தீவனத்தை குறைத்து பசுந்தீவனத்தை கொடுத்து தீவனச் செலவை 40 முதல் 50 சதவீதம் வரை நம்மால் குறைக்க முடியும்.

★ அதுமட்டுமல்லாமல் உலர் தீவனங்களை விட இதில் புரதம் மற்றும் தாது உப்புகளின் அளவு அதிகமாக உள்ளது. மேலும் பசுந்தீவனத்தை உலர் தீவனங்களுடன் சேர்த்து தரும்போது உலர்தீவனங்களின் உட்கொள்ளும் அளவு மற்றும் அவற்றின் செரிமானத் தன்மையும் அதிகரிக்கிறது. 


★ தீவன வகைகள் - தானிய வகை, புல் வகை, பயறுவகை, மர வகை.


தானிய வகை : 

★ சோளம், கம்பு மற்றும் மக்காச்சோளம் ஆகியவை தானிய தீவனமாகும். இதில் அதிகளவு மாவுச்சத்தும், புரதச்சத்தும் அடங்கியுள்ளது.

புல் வகை தீவனங்கள் : 

★ கினியாப்புல், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் (கோ-1, கோ-2, கோ-3 மற்றும் கோ-4), நீர்ப்புல் (எருமைப் புல்), கொழுக்கட்டைப்புல், ஈட்டிப்புல் மற்றும் மயில் கொண்டைப்புல் போன்றவை புல் வகைச் சார்ந்த தீவன வகைகள் ஆகும்.

★ இதிலும் அதிகளவு மாவுச்சத்தும், புரதச்சத்தும் உள்ளது.

பயறு வகை தீவனங்கள் : 

★ வேலிமசால், குதிரை மசால், முயல் மசால், தட்டைப் பயறு ஆகியவை பயறு வகை தீவனங்கள் ஆகும். 

★ மேலும் இதில் அதிகளவு புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து ஆகியவை அடங்கியுள்ளது.


 மர வகை தீவனங்கள் : 

★ அகத்தி, சூபாபுல் (சவுண்டல்), கிளைரிசிடியா, கருவேல், வெள்வேல், ஆச்சா மற்றும் வேம்பு போன்ற மரங்களையும் தீவன மரங்களாக வளர்க்கலாம். இதிலும் புரதச்சத்து மற்றும் தாது உப்பு சத்துக்கள் அடங்கியுள்ளது.


தீவனம் அளிக்கும் முறை : 

★ கால்நடைகளுக்கு பசும்புல் மற்றும் தானிய வகை தீவனப் பயிர்களை 3 பங்கும், பயறுவகை தீவனங்களை 1 பங்கும் கொடுத்து வர வேண்டும்.

★ இவ்வாறு அளிக்கும்போது கால்நடைகளுக்கு புரதம் மற்றும் மாவுச்சத்துகள் சரியான விகிதத்தில் கிடைக்கிறது. இதனால் பால் உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் தீவன செலவையும் நம்மால் குறைக்க முடிகிறது.











Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!