மாடுகளுக்கான பொதுவான மேலாண்மைகள் !!

 மாடுகளுக்கான பொதுவான மேலாண்மைகள் !! 


🐃 மாடுகளை ஒவ்வொரு வயதிற்கேற்ப நன்றாக கவனித்து பராமரிக்க வேண்டும். அந்த வகையில் மாடுகளை எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என பார்ப்போம்.


🐃 கன்றுகள், இளம் மாடுகள், சினை மாடுகள் என தனித்தனியாக பராமரித்தால் அதிக லாபம் பெறலாம்.


கன்றுகளுக்கான மேலாண்மை முறைகள் :


🐃 கன்றுகளுக்கு பொதுவாக போதிய அளவு தீவனமும், கவனிப்பும் இருந்தாலே அவற்றை தரமான மாடுகளாக மாற்ற முடியும்.


🐃 கன்றுகளுக்கு அவை பிறப்பதற்கு முன்பாகவே, சினை மாட்டுக்கு பால் வற்ற செய்து, நன்றாக தீவனம் அளித்தல் வேண்டும்.


🐃 அதாவது தீவனம் குறைவாக அளிக்கப்பட்ட மாடுகள் ஈன்ற கன்றுகள் எதிர்ப்பு சக்தி இல்லாமல், சிறியதாக காணப்படும்.


ஆரம்ப கால மேலாண்மை :


🐃 கன்றுகள் பிறந்தவுடன் அவற்றின் மேல் உள்ள அதாவது மூக்கு, வாய்ப்பகுதியிலுள்ள கோழையினை நீக்கிவிட வேண்டும். அதை தாய் மாடுகளே பார்த்துக்கொள்ளும். அந்த கோழைகளை தாய் மாடுகளே நக்கி உலர்த்திவிடும். அதனால் கன்றுகளின் சுவாசமும், இரத்த ஓட்டமும் சீராக்கப்படும்.


🐃 ஒருவேளை தாய் மாடு அவ்வாறு செய்யவில்லை என்றால், அவற்றை உலர்த்த துணி அல்லது கோணிப்பையால் நன்றாக துடைத்து விட வேண்டும்.


🐃 கொட்டகையிலுள்ள ஈரமான படுக்கைப் பொருட்களை நீக்கிவிட்டு, கொட்டகையை சுத்தமாகவும், ஈரம் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.


🐃 மாடுகளின் மடியை சுத்தம் செய்து, பிறகு தான் கன்றுகளுக்கு சீம்பால் அளிக்க வேண்டும்.


🐃 பிறந்து 1 மணி நேரத்திற்கு பிறகு தானாகவே பாலு}ட்ட பழகிக் கொள்ளும். 


கன்றுகளுக்கு தீவனமளித்தல் :


🐃 கன்றுகளுக்கு முதலில் அவற்றின் தாயிடமிருந்து சீம்பாலை ஊட்ட வைக்க வேண்டும்.


🐃 ஏனெனில் சீம்பாலில் அதிகமான புரதங்கள் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் இருக்கும்.


🐃 இவை கன்றுகளை பல்வேறு நோய்களிடமிருந்து பாதுகாக்க உதவும்.


🐃 பிறகு பால் அளிக்க வேண்டும். கன்றுகளுக்கு ஒரு நாளுக்கு 5-6 லிட்டர் வரை பால் அளிக்கலாம். கன்றுகளுக்கு 6 முதல் 10 வார வயது வரை பால் கொடுக்க வேண்டும்.


🐃 4 மாத காலத்திலிருந்தே பசுந்தீவனத்தைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.


🐃 ஆறு மாத வயதிற்குப் பிறகு கிடேரி மற்றும் காளைக்கன்றுகளைத் தனித்தனியான கொட்டகைகளில் பராமரிக்க வேண்டும்.









Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!