மாட்டை தாக்கும் மடி அம்மை நோய் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்.

மாட்டை தாக்கும் மடி அம்மை நோய் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..! 


மாட்டை தாக்கும் மடி அம்மை நோய் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..! 

நோய்க்கான காரணங்கள் :

◆ சில கறவை மாடுகளுக்கு கன்று ஈன்றவுடன் மடி அம்மை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

◆ கறவை மாடுகளில் மடி அம்மைக் கொப்புளங்கள் ஏற்பட்டால் அதன் பாதிப்பால் சரியாக பால் கறக்கப்படாமல் மடிநோய் ஏற்பட வாய்ப்புண்டு.

◆ கோமாரி, வாய் சப்பை நோய் கண்ட மாடுகளில் அம்மைக் கொப்புளங்கள் காணப்படும். 

◆ இந்த அம்மைக் கொப்புளங்கள் சிறியதாக இருக்கும் போது சரியாகக் கவனித்து மருத்துவம் செய்யாவிட்டால் பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.


அறிகுறிகள் : 

◆ காய்ச்சல் ஏற்படும்.

◆ மடியிலும், காம்புகளிலும், முதலில் நுண்ணிய சிவப்பு புள்ளிகள் தோன்றி விரைவில் அவை கொப்புளங்களாக மாறும். கவனிக்காவிட்டால் அவை நாளடைவில் புண்களாக மாறிவிடும்.


தடுக்கும் முறைகள் :

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : 

◆ திருநீற்றுப் பச்சிலை 10, துளசி 10, வேப்பிலை கொழுந்து 10, பு+ண்டு 4 பல், மஞ்சள் தூள் 10 கிராம், வெண்ணெய் 50 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.


செய்முறை : 

◆ மேற்கண்ட பொருட்களை வெண்ணெய் இல்லாமல் ஒன்று சேர்த்து அரைத்து நீர் மற்றும் கை படாமல் ஒரு கரண்டியில் வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வெண்ணெய் கலந்து கொள்ளவும்.

◆ இந்த மருந்தை ஒருநாள் முழுவதும் பாதிக்கப்பட்ட மாடுகளின் மடியில் தேய்த்து பயன்படுத்தலாம். 

◆ இதை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மறுநாள் புதிதாக மருந்து அரைத்து கொள்ள வேண்டும். 


பயன்படுத்தும் முறை : 

◆ மடி காம்பில் அம்மை ஏற்பட்ட கால்நடைகளின் மடிப்பகுதியை சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துணியால் துடைத்து மேற்கூறிய மருந்து கலந்த வெண்ணெயை கையில் எடுத்து அம்மை உள்ள பகுதிகளில் மென்மையாகத் தடவ வேண்டும்.

◆ பாதிக்கப்பட்ட மாட்டின் மடிகாம்புகளில் கொப்புளம் மற்றும் வெடிப்பு ஏற்பட்டால் அந்த சமயத்தில் காம்பை அழுத்தி பால் கறக்க கூடாது. கவனமாக காயம் பெரியதாகாமல் பாலைக் கறக்க வேண்டும்.









Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!