மாடுகளுக்கான பொதுவான மேலாண்மைகள் !!
மாடுகளுக்கான பொதுவான மேலாண்மைகள் !! 🐃 மாடுகளை ஒவ்வொரு வயதிற்கேற்ப நன்றாக கவனித்து பராமரிக்க வேண்டும். அந்த வகையில் மாடுகளை எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என பார்ப்போம். 🐃 கன்றுகள், இளம் மாடுகள், சினை மாடுகள் என தனித்தனியாக பராமரித்தால் அதிக லாபம் பெறலாம். கன்றுகளுக்கான மேலாண்மை முறைகள் : 🐃 கன்றுகளுக்கு பொதுவாக போதிய அளவு தீவனமும், கவனிப்பும் இருந்தாலே அவற்றை தரமான மாடுகளாக மாற்ற முடியும். 🐃 கன்றுகளுக்கு அவை பிறப்பதற்கு முன்பாகவே, சினை மாட்டுக்கு பால் வற்ற செய்து, நன்றாக தீவனம் அளித்தல் வேண்டும். 🐃 அதாவது தீவனம் குறைவாக அளிக்கப்பட்ட மாடுகள் ஈன்ற கன்றுகள் எதிர்ப்பு சக்தி இல்லாமல், சிறியதாக காணப்படும். ஆரம்ப கால மேலாண்மை : 🐃 கன்றுகள் பிறந்தவுடன் அவற்றின் மேல் உள்ள அதாவது மூக்கு, வாய்ப்பகுதியிலுள்ள கோழையினை நீக்கிவிட வேண்டும். அதை தாய் மாடுகளே பார்த்துக்கொள்ளும். அந்த கோழைகளை தாய் மாடுகளே நக்கி உலர்த்திவிடும். அதனால் கன்றுகளின் சுவாசமும், இரத்த ஓட்டமும் சீராக்கப்படும். 🐃 ஒருவேளை தாய் மாடு அவ்வாறு செய்யவில்லை என்றால், அவற்றை உலர்த்த துணி அல்லது கோணிப்பையால் நன்றாக துடைத்து வ...