Posts

Showing posts from October, 2021

கால்நடைகளுக்கு வரும் தோல் நோய் - அதற்கான தடுப்பு முறை..!

Image
கால்நடைகளுக்கு வரும் தோல் நோய் - அதற்கான தடுப்பு முறை..! Mr Animal  Care, கால்நடைகளுக்கு வரும் தோல் நோய் - அதற்கான தடுப்பு முறை..! Mr Animal  Care, படர் தாமரை : ★ படர் தாமரை நோய் டிரைக்கோஃபைட்டான் வெருகோசம் என்னும் ஸ்போர் உண்டாக்கும் பூஞ்சைகளால் தோற்றுவிக்கப்படுகிறது.  ★ இது மனிதர்களையும் தாக்குகிறது. அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாது.  ★ இப்பூஞ்சையின் பாதிப்பால் ஸ்போர்கள் முளைத்து கால்நடையின் தோல், முடி போன்றவற்றை பாதிக்கிறது. ★  தோலில் இன் நோய் பாதித்த இடத்தில்லிருந்து சாறு போன்ற திரவம் வெளியேரி அதன் ஒவ்வாமையால் தோல் பகுதியில் புண்கள் உண்டாக்குகிறது.  ★  தோலைச்சுற்றிலும் வெளிச்சாம்பல் நிறம் தோன்றும். தலை மற்றும் கழுத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.  ★  இது முடிவயற்ற ஒரு வட்டவடிவ வெண்சாம்பல் நிறத்தில் பல அறிகுறியை உடல் முழுதும் ஏற்படுத்துகிறது. ★  இந்த படர் தாமரை நோய் தானாகவே சரிசெய்யக்கூடியது, அதாவது மாடுகளைச் சுத்தமாகவும், தண்ணீர் தேங்கும் இடத்தில் கட்டி வைக்காமலும் பாதுகாக்கலாம். ★  படர்தாமரை நோய் வராமல் தடுக்க மாட்டின் மேல்புறத்தில் வ...

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

Image
மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..! Cow Stomach Flatulence - Symptoms and Prevention.! Mr Animal Care, மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..! நோய்க்கான காரணங்கள் :  ★ மாடுகளின் வயிற்றில் நொதித்தல் மூலம் உண்டாகும் அதிகப்படியான வாயுவினால் இந்நோய் ஏற்படுகிறது. ★ மாடுகளின் வயிற்றில் தீவனம் நொதிக்கும் போது உண்டாகும் வாயு மூலக்கூறுகள் ஒன்றாக இணைந்து வயிற்றிலிருந்து காற்று வெளியேறுவது தடுக்கப்பட்டு வயிறு உப்பி விடும். ★ நிலையான நுரை வயிற்றில் உண்டாவதால் இந்நோய் ஏற்படுகிறது.  ★ மாடுகளின் அசையு+ண் வயிற்றில் நுரைப்புத் தன்மை ஏற்படுவதால் வயிறு உப்புசம் ஏற்பட்டு மாடுகள் சிரமத்திற்கு உள்ளாகின்றன. ★ புரதச்சத்து கொண்ட பயிறு வகைத் தீவனங்களான ஆல்பால்பா போன்றவற்றின் இளம் இலைகளை மாடுகள் உண்ணும் போது அவற்றில் இருக்கும் அதிகப்படியான கரையும் புரதச்சத்து மற்றும் இளம் தானியப் பயிர்களை மேய்வது போன்றவை வயிறு உப்புதல் ஏற்படக் காரணமாக அமைகின்றன. ★ அதிக தரம் வாய்ந்த வைக்கோலைத் தீவனமாக அளிப்பதாலும் ஏற்படுகிறது.  ★ அதிக தானியங்கள் நிறைந்த தீவனத்தினை மாடு...

உதைக்கின்ற கறவை மாடு மற்றும் எருமையில் பால் கறக்கும் முறை !!

Image
உதைக்கின்ற கறவை மாடு மற்றும் எருமையில் பால் கறக்கும் முறை !! உதைக்கின்ற கறவை மாடு மற்றும் எருமையில் பால் கறக்கும் முறை !! Mr Animal Care , ★  கறவை மாடு மற்றும் எருமை மாடுகளின் மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடுவதில்லை. எருமை மற்றும் பசு பால் கறக்கும் போது உதைக்கின்றது.  ★  மேலும் கறவை மாடு மற்றும் எருமை மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடவில்லை என்றால் இந்த பிரச்சனையை சரி செய்ய இயற்கை முறையில் தீர்வு என்ன என்று பார்ப்போம். இதற்கு தேவையான பொருட்கள் :  ஜாதிக்காய் - 2 எண்ணிக்கை விரலி மஞ்சள் - 10 கிராம் ★ முதலில் இந்த ஜாதிக்காய் மற்றும் விரலி மஞ்சளை நன்றாக பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். ★  பின்னர் கறவை பசு மற்றும் எருமையில் பால் கறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அடர் தீவனத்திலோ அல்லது தண்ணீரிலோ இந்த ஜாதிக்காய் விரலி மஞ்சள் கலந்த பொடியை கறவை மாட்டிற்கு அரை ஸ்பு+ன் மற்றும் எருமை மாட்டிற்கு ஒரு ஸ்பு+ன் என்ற அளவில் கலந்து கொடுக்க வேண்டும். ★ அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து பால் கறக்கும் போது பசு மற்றும் எருமை அமைதியாக இருக்கும். பின்னர் கறவை மாடுகள் மற்ற...

கோமாரி நோயால் வரும் புண் மற்றும் அதற்கான சிகிச்சை முறை..!

Image
கோமாரி நோயால் வரும் புண் மற்றும் அதற்கான சிகிச்சை முறை..! கோமாரி வாய்ப்புண் : கோமாரி கால் புண்  : சிகிச்சை முறை :  (வெளி பூச்சு மருந்து) மாட்டுக்கு வாயில் அடிக்கடி கொப்புளங்கள் வருதல் :  Mr Animal Care , கோமாரி கோமாரி வாய்ப்புண் : ★  வாய்ப்புண் ஒரு நச்சுயிரி நோயாகும். இது மாடு, ஆடு மற்றும் பன்றிகளைத் தாக்குகிறது. வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும்.  ★ எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும்.  ★ பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மடியில் கன்றுகளை பால் ஊட்ட விடுதல் கூடாது.  ★ ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : ★ தேங்காய் துருவல் - 1 தேங்காய் (பால் கட்டியது), சீரகம் - 50 கிராம், வெந்தயம் - 30 கிராம், மஞ்சள் பொடி - 10 கிராம், கருப்பட்டி (பனை வெல்லம்) - 20 கிராம் எடுத்து கொள்ள வேண்டும். சிகிச்சை முறை - மாடு ஒன்றுக்கு உள் மருந்து : (வாய் வழியாக) ★ சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி அரைத்து தேங்காய் துருவலுடன் கலந்து நோய் கண்ட மாடு ஒன்றுக்கு தினமு...

நாக்குப்பூச்சி நோய் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..

Image
நாக்குப்பூச்சி நோய்  அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..! நாக்குப்பூச்சி நோய்  அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..! Mr Animal Care, நாக்குப்பூச்சி நோய் ★  இந்நோய் நாக்குப்பூச்சி என்ற உருண்டைப்புழுவினால் ஏற்படுகிறது. இந்நோயின் தாக்கம் இளம் கன்றுகளில்தான் காணப்படும்.  ★  குறிப்பாக எருமைக் கன்றுகளில் அதிகமாகக் காணப்படும். இந்த உருண்டைப் புழுக்களின் இளம் புழுப்பருவம் சீம்பால் வழியாகத் தாய் மாட்டிலிருந்து இளம் கன்றுகளுக்குச் செல்கிறது.  ★  இந்த இளம் புழுப்பருவம் கன்றுகளின் குடலில் 25 செ.மீ நீளம் வரை வளர்ந்து நோயை உண்டாக்குகின்றன.  ★  இந்நோயினால் பாதிக்கப்பட்ட கன்றுகளில் களிமண் நிறத்தில் கொழுப்பு கலந்த கழிச்சல் காணப்படும்.  ★ சாணம் துர்நாற்றத்துடன் இருக்கும். மேலும் புழுக்களின் நச்சுகளினால் வயிற்றுவலி ஏற்படும். புழுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கன்றுகள் இறக்க நேரிடும். ★ பரிசோதனை செய்து புழுக்களின் முட்டைகள் உள்ளதா என்று பார்த்து இந்நோயைக் கண்டறியலாம்.  ★  நோய்த் தாக்கம் காணப்பட்ட கன்றுகளுக்குக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்ப...

நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்கள் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் ..!!!

Image
நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்கள் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் ..!!! நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்கள் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் ..!!! Mr Animal Cere நோய்க்கான காரணங்கள் : ★ கறவை மாட்டின் உணவுப் பாதையில் வாழும் நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்கள் போன்றவைகளும், காக்சிடியா எனப்படும் ஓரணு வகை ஒட்டுண்ணியும் மாட்டின் ஆரோக்கியத்தை மிகவும் பாதித்து உற்பத்தியைக் குறைக்கின்றன.  ★ இத்தகைய ஒட்டுண்ணிகள், மாட்டின் இரத்தத்தை உறிஞ்சியோ அல்லது மாட்டிற்கு சேர வேண்டிய உணவுப் பொருட்களைத் தாம் உண்டோ வாழும்.  ★ உணவு சரிவர குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுத்தோ அல்லது சில நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்து குடற்பகுதியைத் தாக்கியோ மாட்டின் நலத்தைக் கெடுக்கின்றன.  நோய் அறிகுறிகள் : ★ கன்றுகள், மாடுகள் நாளடைவில் மெலிந்து சோகையுற்றுக் காணப்படும். சரிவர தீவனம் உட்கொள்ளாது.  ★ பற்களை அடிக்கடி நறநறவென்று கடித்தல், உடலில் அதிக ரோமம் வளர்தல், ரோமம் சிலிர்த்துக் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.  ★ வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படும். சாணம் தண்ணீர் போல...

கறவை மாடு வளர்ப்பு உத்திகள் !!

Image
கறவை மாடு வளர்ப்பு உத்திகள்... !! கறவை மாடு வளர்ப்பு உத்திகள்... !! Mr Animal Cere கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகள் மற்றும் சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும். அதை பற்றி இங்கு காண்போம். பராமரிப்பு முறைகள் : ◆ சினை ஊசி போட்ட கறவை மாடுகளுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல் சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது. ஏழாவது மாதம் முடிந்த பிறகு சினைப் பசுவை தனியாகப் பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். ◆ மேலும் கருவில் உள்ள இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான ...

மாட்டு மடிக்காம்பு வெடிப்பு - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!

Image
மாட்டு மடிக்காம்பு வெடிப்பு - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!  Cow hip rupture - symptoms and prevention methods .. !! மாட்டு மடிக்காம்பு வெடிப்பு - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!  Mr Animal Cere அறிகுறிகள் : ◆ கறவை மாடுகளின் மடியில் காயம் மற்றும் வெடிப்புகள் ◆ மடி வீக்கமாக காணப்படும். ◆ சில நேரங்களில் மடியிலிருந்து இரத்தக்கசிவு ஏற்படும். தடுப்பு முறைகள் : ◆ கறவை மாடுகளின் மடியில் காயம் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டால் மூலிகை முதலுதவி செய்வதன் மூலம் கறவை மாடுகளில் பொருளாதார இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். முதலில் மடியைக் கழுவி கீழ்க்கண்ட முறையில் சுத்தம் செய்ய வேண்டும். ◆ ஒரு லிட்டர் சுத்தமான நீரில் ஒரு கரண்டி (5 கிராம்) மஞ்சள்தூள் மற்றும் ஒரு கரண்டி (5 கிராம்) கல் உப்பு கலந்து நீரைக் கொதிக்க வைத்து ஆறியவுடன் மடி மீது தௌpத்து சுத்தமாகக் கழுவ வேண்டும்.  ◆  மேற்கூறிய நீரில் கழுவிய மடி மற்றும் காம்பு பகுதியை நன்கு உலர்ந்த சுத்தமான பஞ்சு துணியினால் ஈரம் உறிஞ்சும்படி ஒற்றித் துடைக்க வேண்டும். தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :  ◆ மஞ்சள்...

பர்கூர் இன மாட்டின் இயல்புகளை பற்றி கூறுக? Other Animal Care,

Image
கால்நடை சம்பந்தப்பட்ட கேள்வி - பதில்கள்..! பர்கூர் இன மாட்டின் இயல்புகளை பற்றி கூறுக? Tell us about the nature of the Barkur breed of cow? Mr Animal Care :  பர்கூர் இன மாட்டின் இயல்புகளை பற்றி கூறுக? ◆ ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா பர்கூர் குன்றுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற இனம் தான் இது. ◆ பழுப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளும், திட்டுகளும் கொண்ட உடலமைப்பைக் கொண்டிருக்கிறது. உழுவதற்கும், வண்டி இழுப்பதற்கும் ஏற்ற திடமான இனம். கன்றுகளுக்கான அடர்தீவனம் தயாரிப்பது எப்படி? ◆ மக்காச்சோளம் 42 கிலோ, கடலைப் புண்ணாக்கு 35 கிலோ, கோதுமைத் தவிடு அல்லது அரிசித் தவிடு 10 கிலோ, மீன் தூள் 10 கிலோ, தாது உப்புக் கலவை 2 கிலோ, உப்பு 1 கிலோ ஆகியவற்றை அரைத்து கன்றுகளுக்கு அடர்தீவனம் தயாரிக்கலாம். ◆ கன்றுகளுக்கு ஒரு நாளைக்கு 1-1.5 கிலோ (மற்ற தீவனத்தை உண்ணும் வரை) கொடுக்க வேண்டும். பிறகு, அவைகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். மாட்டிற்கு கோபுரச் சுழி என்பது எங்கு, எவ்வாறு இருக்கும்? ◆ மாடுகளின் திமிலின் மேலும், திமிலுக்கு முன்புறத்திலும் (திமிலின் முன்புறம் எதிரே நின்ற...

கறவை மாடுகளுக்கு கருவூட்டலுக்கான பராமரிப்பு !!

Image
கறவை மாடுகளுக்கு கருவூட்டலுக்கான பராமரிப்பு !! Fertilization care for dairy cows !! கருவூட்டலுக்கு முன்  மாடுகள்  பராமரிப்பு. கறவை மாடுகளுக்கு கருவூட்டலுக்கான பராமரிப்பு !! கருவூட்டலுக்கு முன்  மாடுகள்  பராமரிப்பு . Mr Animal Care : ★ கறவை மாடுகளைக் கருவூட்டலுக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக மாடுகளை அடித்தோ, உதைத்தோ, துன்புறுத்தியோ அல்லது அதிக பயத்திற்கு உட்படுத்தியோ கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். ★ இவ்வாறு கொண்டு செல்லப்படும் கறவை மாடுகளில் அட்ரீனலின் எனப்படும் கனநீர் (ர்ழசஅழநெ) சுரந்து கருப்பையின் இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்துவிடும். இதன் காரணமாக பிட்யூட்டரி எனப்படும் நாளமில்லாச் சுரப்பியின் கனநீரான ஆக்சிடோசின் இரத்த நாளங்கள் வழியாக கருப்பையை அடைவது தடைபட்டுவிடும். ★இதன் மூலமாக கறவை மாடுகளின் கருப்பை சுருங்கி விரியும் தன்மை பாதிப்படைந்து விந்தணுக்கள் கரு முட்டையோடு இணைவது தடைபடும். மேலும், கருவூட்டல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மாடுகளுக்கு உடனடியாக கருவூட்டல் செய்யாமல் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கட்டி வைத்து பிறகு கருவூட்டல் செய்வதன் மூலம் மேற்கூறிய ...

அடைப்பான் நோய் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!

Image
அடைப்பான் நோய் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!! Cock disease - symptoms and preventive methods...! அடைப்பான் நோய் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!! Mr Animal Care நோய்க்கான காரணங்கள் : ◆ இந்நோய் பாக்டீரியா கிருமியால் மாடுகளுக்கு ஏற்படும் நோயாகும். மாடுகளை மட்டுமல்லாமல், மனிதர்களையும் தாக்கும் தன்மையுடையது.   ◆ நம் நாட்டில் எல்லா இடங்களிலும் குறிப்பாக வெப்பம் மிகுந்த, ஈரக் கசிவுள்ள, காற்றோட்ட வசதியுள்ள இடங்களிலும் இந்நோய் அதிகம் காணப்படுகிறது. ◆ இந்நோய்க் கிருமிகள் உடலிலிருந்து வெளியேறியவுடன் காற்றுடன் சேர்ந்து விரைவில் அழிக்க முடியாத ஸ்போர்களாக மாறி விடுகின்றன.  ◆ கிருமிகள் தன் வெளிப்புறமாகக் கெட்டியான கவசத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. கிருமி நாசினிகள் எளிதில் இக்கவசத்தினுள் சென்று நுண்கிருமிகளை அழிக்க முடியாது.  ◆ இத்தகைய ஸ்போர்கள் நிலத்தில் தங்கி அவ்வப்போது மாடுகளைத் தாக்கி, பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.  ◆ மேலும் தண்ணீரில் கலந்து நீண்ட தூரம் எடுத்துச் செல்லப்பட்டு பிற மாடுகளுக்கும் நோயை ஏற்படுத்துகின்றன. நோயின் அறிகுறிகள் : ◆ இந்நோயால் திடீர...

மானியத்துடன் பால் பண்ணை அமைக்க கடன் திட்டம் !!

Image
மானியத்துடன் பால் பண்ணை  அமைக்க கடன் திட்டம் !! Loan plan to set up milk farm with subsidy !! மானியத்துடன் பால் பண்ணை  அமைக்க கடன் திட்டம் !! Mr Animal Care ◆  ப ரம்பரையாக மாடு வளர்ப்பவர்கள் பலரும் பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லாமல் வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் சரியாகத் திட்டமிட்டு செய்தால் பால் பண்ணையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும். இப்போது மானியத்துடன் பால் பண்ணை அமைப்பது எப்படி என்று பார்ப்போம். திட்டம் : ◆ இந்த திட்டம் மூலம் மாட்டுப்பண்ணை அமைக்க நபார்டு வங்கியின் மூலம் கடன் வழங்கப்படுகிறது.  ◆ மேலும் இந்த திட்டத்தின் மூலம் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க 6 லட்சம் வரை கடன் பெற முடியும். யார் எல்லாம் கடன் வாங்கலாம் : ◆ இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட கடன் பெறலாம். ◆ மேலும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பண்ணை வைக்கும் போது அவர்களது பண்ணை 500 மீட்டருக...